50-வது படத்திற்கு தயாராகும் சிம்ரன் : அறம் இயக்குநருடன் இணையும் இடுப்பழகி

தமிழ் சினிமா உலகில் நாட்டிய பேரொளி பத்மினி, கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி போன்ற கதாநாயகிகளின் ஆடலுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. ஆனால் அதன் பிறகு மிகுந்த இடைவெளி ஏற்பட்டது.

நடனத்தில் தனித்துவமாக எந்த கதாநாயகியும் பேசப்படவில்லை. 90களில் பிற்பகுதியில் நடிகை குஷ்பு அந்த இடத்தை நிரப்பினார். குஷ்புவும் இடைவெளி கொடுக்க மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகைகள் நடனத்திற்கென்று தனி ரசிகர் கூட்டம் சேர்ந்தது என்றால் அது இடுப்பழகி சிம்ரன் தான்.

தமிழில் தளபதி விஜய்யுடன் ஒன்ஸ்மோர் படத்தில் அறிமுகமாகி அதில் தன்னுடைய அபார நடனத்தை வெளிப்படுத்தி இருப்பார். அதன் பிறகு அடுத்தடுத்து வந்த படங்களில் எல்லாம் ஹீரோக்களையே மிஞ்சும் அளவிற்கு நடனத்தில் ஹீரோக்களை வாயடைக்க வைத்தார். இவரின் ஒவ்வொரு நடன அசைவுகளும் டான்ஸ் மாஸ்டர்களையே வியக்க வைத்தது எனலாம். அந்த அளவிற்கு நடனத்தில் தனித்துவம் காட்டிய சிம்ரன் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்தார்.

2000 ஆண்டுகளில் சுமார் 75 லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நடிகை என்ற பெருமையை பெற்றார். அதன் பிறகு திருமணம் ஆகி செட்டிலாகி விட நடிப்பதை குறைத்துக் கொண்டார். பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் முன்தினம் பார்த்தேனே என்ற பாடலுக்கு தன்னுடைய அக்மார்க் நடனத்தை வெளிப்படுத்தினார். அண்மையில் ஜெயிலர் காவாலா பாடலுக்கு AI மூலம் உருவாக்கப்பட்ட இவரது நடனம் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.simran 1

நடனத்தில் சாதித்த சிம்ரனுக்கு மிகஅழுத்தமான கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்பு குறைவாக இருந்தது. அதனை தற்போது நிவர்த்தி செய்யும் விதமாக தன்னுடைய ஐம்பதாவது படத்தில் நடிக்கவிருக்கிறார்.

மீண்டும் திருமணத்திற்குத் தயாராகிறார் அமலாபால்…?! அதற்காக இப்படியா இளசுகளை சூடேற்றுவது..?

நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் ஆக மாற்றிய படங்களில் அறம் திரைப்படத்திற்கு முக்கிய பங்கு உண்டு. கலெக்டராக இவர் நடித்த அறம் திரைப்படத்தை இயக்குனர் அறிவழகன் மிகவும் நேர்த்தியாகவும் எமோஷனலாகவும் இயக்கியிருந்தார். நயன்தாராவிற்கு பெயர் பெற்றுக் கொடுத்த இந்த திரைப்படம் போல மீண்டும் சிம்ரனுக்காக ஒரு கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் அறிவழகன். அதன்படி சிம்ரனின் 50வது படமான இத்திரைப்படத்திற்கு சப்தம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு தற்போது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிம்ரனின் நடனத்தை ரசித்த நாம் இந்த திரைப்படம் மூலம் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் என நம்புவோம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...