ஜெயம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான எம்.ராஜா அதே படத்தில் தம்பியை ஹீரோவாக அறிமுகம் செய்தார். தெலுங்கில் ஹிட்டான ஜெயம் படத்தை அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்தார் எம்.ராஜா. தமிழிலும் படு பயங்கரமான வெற்றியை அடைந்தது.
அண்ணன், தம்பி இருவருக்குமே நல்ல தொடக்கம் அமைந்தது. ஜெயம் படத்தின் வெற்றிக்கு பிறகு, மீண்டும் இணைந்தது அண்ணன், தம்பி கூட்டணி தெலுங்கில் ஹிட்டான ’அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி’ என்ற படத்தினை தமிழில் ரீமேக் செய்ய தயாராகினார்.
அம்மா சென்டிமெண்ட் படம் என்பதால் தமிழ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஜெயம் ரவி அந்த படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாகவும் மாறினார். தெலுங்கில் ஹிட்டான பல படங்களை தமிழில் ரீமேக் செய்தார் எம்.ராஜா எல்லா படங்களிலும் ஜெயம் ரவி தான் ஹீரோவாக நடித்தார்.
நடிகராக ஜெயம் ரவியின் நிலை உயர்ந்து பொன்னியின் செல்வன், தக் லைஃப் என முன்னணி படங்களில் நடிப்பதற்கு பாதை கொடுத்தவர் அவருடைய அண்ணன் எம்.ராஜாதான். தொடர்ந்து ரீமேக் படங்களையே இயக்கியதால் விமர்சனங்களுக்கு உள்ளானர்.
அதன் பின் ரீமேக் அல்லாத படங்களான தனி ஒருவன், விஜய்யுடன் வேலாயுதம் போன்ற படங்களை எடுத்தார். அதுவும் வெற்றிப்படமாகவே அமைந்தது. தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக தகவல்கள் வந்த நிலையில், அந்தபடத்தில் அரவிந்த் சாமி கேரக்டரை பகத் பாசில் நடிக்கபோவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் பார்ட்-2 விற்கான ஸ்கிரிப்ட் ஒர்க்கை எம்.ராஜா முடித்து விட்டதாகவும், இதில் நதியாவின் கேரக்டர் இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும், ஜெயம் ரவி ஏற்கனவே கமிட் ஆகி உள்ள படங்கள் நிறைய இருப்பதால் அதில் நடித்து முடிக்க வேண்டும்.
பின் தனி ஒருவன் – 2 படத்தை எடுத்து முடித்த பின்பே, எம்.குமரன் படத்தின் பார்ட் 2விற்கான பணிகள் தொடங்கும் என இயக்குனர் எம். ராஜா தெரிவித்துள்ளார். முதலில் எம்.குமரன் படத்தில் தனுஷ் தான் நடிப்பதாக இருந்ததுள்ளது. சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தும் சில காரணங்களால் படம் தடைபட்டது. அதன் பின் ஜெயம் ரவியே அந்த ஹீரோவாக படத்தில் நடித்தார்.
ஜெயம் ரவி, நதியா, அசின், பிரகாஷ்ராஜ்,விவேக், வெண்ணிற ஆடை மூர்த்தி என நடிகர்கள் பட்டாளம் குவிந்து மக்களை கவர்ந்தது. எம்.குமரன் படத்தின் பார்ட் -2வும் அதே வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தில் அம்மா சென் மெண்ட் இருந்தது. பார்ட் – 2 யாருடைய சென்டிமெண்ட்டில் நகரக்கூடிய ஸ்டோரியாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.