கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ரஜினிகாந்த் அவர்கள் பெங்களூரு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது நாடகங்களில் நடிக்க தொடங்கினார். அதன் பிறகு 1973ல் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பட்டயம் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் முதன்முதலாக அறிமுகமானார். அன்று திரையுலகில் அடி எடுத்து வைத்த ரஜினிகாந்த் அபூர்வராகங்கள் தொடங்கி தற்போது ஜெய்லர் வரை 150 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
திரையுலகில் திறமையான நடிப்பாலும் ஸ்டைலாலும் சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு வலம் வரும் இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். ஆனால் சிலர் ரஜினி அவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர். கன்னடர், எனவே அந்த மாநிலத்தின் மீதுதான் அவருக்கு பற்றும் நேசமும் அதிகமாக இருக்கும் என கூறுவது உண்டு.
இது நிஜமில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக கர்நாடகாவில் ரஜினி அவர்கள் ஒரு தரமான சம்பவத்தை செய்தார். 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் அவர்களுக்கு ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ரஜினி அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை அடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்க கர்நாடகாவிற்கு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அங்குள்ள மக்கள் மத்தியில் மேடையில் பேசினார். அப்போது அவர் கன்னடத்தில் உங்கள் எல்லோருக்கும் கர்நாடகா அரசுக்கும் எனது நன்றி என கூறினார்.
பின்னர் தமிழில் பேசிய ரஜினிகாந்த் என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம் என பேசியுள்ளார். கர்நாடகாவுக்கே சென்று தமிழக மக்களை என்னை வாழவைக்கும் தெய்வங்கள் என்று உயர்த்தி பேசி தரமான சம்பவம் செய்தார்.
நான் செத்தா இதை செய்வியா? சிவாஜி கேட்ட கேள்வி.. சொன்னதை செய்து காட்டிய ரஜினி..!
இதன் மூலம் ரஜினி அவர்களின் பாசம் நேசம் எல்லாம் முதலில் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் தான் என்பதை உணர்த்தியுள்ளார். இத்தகைய பண்பால் தான் ரஜினிகாந்த அவர்கள் இன்னும் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ரசிகர்களும் அவரை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.