ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித்துடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்ட டெல்லி கணேஷ்.. இவ்வளவு நடந்திருக்கா?

தமிழ் சினிமாவின் இணையற்ற குணசித்திர நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல பிரபலங்களின் பிளஸ் மற்றும் மைனஸ்களை சொல்லி உள்ளார்.

கமல்ஹாசன் நாயகன், ஹேராம், அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். மேலும் , இப்பொதெல்லாம் தன்னை யாரும் கண்டுகொள்வதெ இல்லை என்பதையும் கூறிப்பிட்டிருந்தார்.

டெல்லி கணேஷ் பேட்டி

பட்டின பிரவேசம் படத்தில் அறிமுகமான டெல்லி கணேஷ் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும், சின்னத்திரையிலும் நடித்துள்ளார்.

லவ் டுடே படம் உருவாவதற்கு முன்னதாக அப்பா லாக் எனும் டைட்டிலில் எடுத்த குறும்படத்தில் அப்பா கேரக்டரில் டெல்லி கணேஷ் நடித்திருந்தார். ஆனால், அந்த குறும்படம் திரைப்படமாகும் போது டெல்லி கணேஷுக்கு பதிலாக சத்யராஜை நடிக்க வைத்திருந்தார் பிரதீப் ரங்கநாதன்.

ரஜினிகாந்த் பாராட்டுவதில் மன்னன்

ரஜினிகாந்தின் 100வது படமான ராகவேந்திரா படத்தில் நடித்த போது, இறுதியில் ஸ்லோகம் ஒன்று சொன்னால் நல்லா இருக்கும் என இயக்குநர் கேட்க, அதற்கு டெல்லி கணேஷ் ஒரு ஸ்லோகம் சொல்லியிருக்கிறார் .

அதை கேட்ட ரஜினிகாந்த் ரொம்ப நல்லா இருக்கு என பாராட்டினார். ரஜினிகாந்த் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படம் மட்டுமில்ல யார் எதை சிறப்பாக செய்தாலும் அதை உடனடியாக பாராட்டும் தன்மை வாய்ந்தவர் என்பதை டெல்லி கணேஷ் வழியாக ரசிகர்களுக்கு தெளிவாக தெரிய வருகிறது.

கமல் ரொம்ப ஊக்கம் கொடுப்பார்

நாயகன் படத்தில் கமலின் நண்பராக முதல் நாளில் கதையே தெரியாமல் நடித்திருந்தேன். என் நடிப்பை பார்த்து கமல் உங்களுக்கு என்ன கதைன்னு தெரியாதா என கேட்டு, மொத்த கதையும் நறுக்கென சொன்னதன் விளைவாக அந்த கதாபாத்திரத்தில் அப்படி நடித்தேன்.

ஹேராம் படத்தில் முதலில் அந்த ரோலில் நடிக்க முடியாது என பயந்தேன். அதெல்லாம் ஒண்ணுமில்லை என ஷாருக்கானிடம் என்னை அறிமுகப்படுத்தி என்னை பற்றியெல்லாம் எடுத்துச் சொல்லி கமல் நடிக்க வைத்தார்.

தமிழன் படத்தில் சிகரெட் சீன்

நடிகர் விஜய்யுடன் தமிழன் படத்தில் நடிக்கும் போது, அமைதியா உட்கார்ந்து இருப்பாரு, என்ன 60 வயது சன்னியாசி போல இருக்கீங்க என்று கேட்டதுமே சிரித்து விட்டார். அப்படியெல்லாம் இல்லை கணேஷ் சார், நீங்க எல்லாம் சீனியர் அதான் சைலன்ட்டாக இருக்கேன் என்றார்.

அதன் பிறகு அந்த சிகரெட்டை நிறுத்திறுயா சீன் பண்ணி முடித்த உடனே ரொம்ப சூப்பரா பண்ணிட்டீங்க சார் என பாராட்டி விட்டார்.

ஆட்டுக்கால் சூப் போட்டுக் கொடுத்த அஜித்

நடிகர் அஜித் ஜனா படத்தின் ஷூட்டிங்கின் போது எனக்கு திடீரென ஆட்டுக்கால் சூப் செய்துக் கொண்டு வந்து கொடுத்தார். அதை பார்த்ததுமே அய்யோ நான் அசைவம் சாப்பிட மாட்டேன் என்றேன் உடனடியாக ஒண்ணும் பிராப்ளம் இல்லை என சொல்லி விட்டு அடுத்த நாள் தக்காளி சூப் செய்து வந்து கொடுத்து அசத்தினார் என முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்ட டெல்லி கணேஷ் தற்போது தனக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்படுவது குறித்தும் வருத்தப்பட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews