நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ஜெயிலர் படத்தின் மெகா ஹிட் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது ஜெய் பீம் இயக்குனர் த.செ ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் தனது 170 வது திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சன், தெலுங்கு நட்சத்திரம் ராணா, மலையாள நட்சத்திரம் ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் நடிகர் ரஜினி மற்றும் மஞ்சுவாரியார் தொடர்பான பட காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்ற நிலையில் அங்கு அமிதாப்பச்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் இடையே ஆன காட்சிகள் படமாக்கப்பட்டது.
தற்பொழுது தலைவர் 170 படத்தின் படப்பிடிப்புகள் சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்காக கமிஷனர் அலுவலகம் போன்ற இரண்டு பிரம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்புகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபஹத் பாசில்,ரித்திகா சிங் தொடர்பான காட்சிகள் படமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும் படப்பிடிப்புகளில் பாகுபலி வில்லன் ராணா மற்றும் துசாரா விஜயன் இவர்களுக்கிடையே ஆன காட்சிகள் படமாக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படம் ஜெய் பீம் திரைப்படத்தை போன்று உண்மை கதாபாத்திரத்தை மையமாக வைத்து படம் இயக்கி வருவதாகவும், இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு முஸ்லிம்கள் சமூகத்தை சார்ந்த உயர்ந்த போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் கதை போலி என்கவுண்டர்களை அறியும் பட்சத்தில் அமைந்துள்ளது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் இறுதியில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் லால் சலாம் திரைப்படத்திலும் ரஜினி மொய்தீன் பாய் என்னும் முஸ்லிம் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தளபதி 68 படத்தின் ஓபனிங் சாங் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த பிரபலம்?
இந்நிலையில் தலைவர் 170 படத்திலும் ரஜினி ஒரு போலீஸ் அதிகாரியாகவும், பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் போலி என்கவுண்டர்களுக்காக போராடும் ஒரு சிறந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக பிரபல திரை விமர்சகர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஜெய் பீம் திரைப்படத்தைப் போல தலைவர் 170 திரைப்படமும் திரையில் வெற்றி பெற்று பல விருதுகளை குவிக்கும் என ரஜினி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது