தளபதி 68 படத்தின் ஓபனிங் சாங் குறித்து மாஸ் அப்டேட் கொடுத்த பிரபலம்?

தென்னிந்திய திரை உலகில் குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக தளபதி விஜய் வலம் வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் 7 ஸ்கின் ஸ்டூடியோ லலித் குமார் தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சங்கீதா என பல திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கடந்த மாதம் மிக பிரமாண்டமாக வெளியான லியோ திரைப்படம் உலக அளவில் 550 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்ததாக கூறப்படுகிறது. மல்டி ஸ்டார் படமாக உருவாகிய இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருப்பார். இந்தப் படத்தின் அறிவிப்பை தொடர்ந்து வெளியான முதல் பாடலான நான் ரெடி வரவா பாடல் பட்டி தொட்டி எங்கும் தீயாகப் பரவி விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தனது 68வது திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பில் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் நடிகர் விஜய், நடிகர் பிரசாந்த், நடிகர் பிரதீப் பிரபுதேவா, நடிகர் அஜ்மல் என நான்கு முக்கிய நடிகர்கள் இணைந்து நடனம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இந்த படத்தின் பிரமாண்ட சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

மேலும் தளபதி விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதைத்தொடர்ந்து இந்த படத்தில் நடிகை சினேகா, நடிகை லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளது. ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

20 வருடத்தில் 80 படங்களைத் தொட்ட லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா?

புதிய கீதை திரைப்படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப்பின் தளபதி விஜய் உடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணையும் இந்த திரைப்படம் தளபதி மற்றும் இவன் ரசிகர்களிடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் இந்த படத்தின் ஓபனிங் சாங் குறித்த சில மாசான அப்டேட்டுகள் வெளிவர துவங்கியுள்ளது. இந்நிலையில் தளபதி 68 படத்தின் ஓபன் சாங்கை எழுதிய பாடல் எழுத்தாளர் மதன் கார்க்கி சில ரகசிய அப்டேட்களை சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

பொதுவாக தளபதி விஜயின் படங்களில் ஓப்பனிங் சாங் மிகச் சிறப்பாக இருக்கும். மேலும் குடும்ப ரசிகர்களை கவரும் விதத்தில் அந்த பாடல்கள் உருவாகும் பட்சத்தில் படத்தின் வெற்றிக்கு அதுவே ஒரு பக்க பலமாக அமைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் தளபதி 68 படத்தின் பாடல் ஒட்டுமொத்த ரசிகர்களை குத்தாட்டம் போட வைக்கும் அளவிற்கு மிக பிரபலமாக அமைந்துள்ளதாக எழுத்தாளர் மதன் கார்த்தி தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாடல் தளபதி விஜய் ரசிகர்களுக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் விதத்தில் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த பாடலுக்கு மிக சிறப்பாக இசையமைத்துள்ளதாகவும் அந்த பாடலை தளபதி விஜய் பாட உள்ளாரா இல்லையா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.