இந்தியாவின் பிரபல சுற்றுலா நகரம் கோவா. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே கோவா பிரபல சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. ஏனெனில் கப்பல் போக்குவரத்திற்கு ஏதுவான சூழல் கோவா கடல் பகுதி உள்ளதால் பல்வேறு வெளிநாட்டவரும் கோவாவில் வந்து முகாமிடுகின்றனர். மலைகளும், கடலும் இருக்கும் அழகான யூனியன் பிரதேசம் கோவாவில் பல்வேறு வெளிநாட்டவரும் வந்து செல்வதால் இங்கு உலக கலாச்சாரம் அனைத்தும் காணலாம். இதனால் தான் இங்கு சர்வதேச திரைப்பட விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம்.
தற்போது 54-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடந்து வருகிறது. மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மாதுரி தீக்சித், ஷாகித் கபூர், ஸ்ரேயா சரண், நுஷ்ரத் பரூச்சா, பங்கஜ் திரிபாதி, சாந்தனு மொய்த்ரா, ஸ்ரேயா கோஷல் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோர் கலந்து கொண்டு நடனமாடினர்.
மேலும் இந்நிகழ்வில் சல்மான் கான், வித்யா பாலன், ஆயுஷ்மான் குரானா, அனுபம் கெர், விக்கி கவுஷல், சித்தார்த் மல்ஹோத்ரா, அதிதி ராவ் ஹைதாரி, ஏ.ஆர்.ரஹ்மான், அமித் திரிவேதி உள்ளிட்ட திரை பிரபலங்களும் கலந்துகொண்டனர். மொத்தம் 9 நாட்கள் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சினிமாக்கள் திரையிடப்படுகின்றன.
துருவ நட்சத்திரம் ரிலீஸ் என்னாச்சு..! இன்னும் பஞ்சாயத்து முடிக்காத கௌதம் வாசுதேவ் மேனன்
இவ்விழாவில் விஜய் சேதுபதி நடித்த மௌனப் படமான காந்தி டாகீஸ் திரையிடப்பட்டது. அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி, நடித்துள்ள இப்படம் பிளாக் காமெடியை அடிப்படையாகக் கொண்ட உருவாக்கப்பட்டது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் கோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
தற்போது கோவாவில் முகாமிட்டிருக்கும் விஜய் சேதுபதி ஓய்வு நேரத்தில் போட்டிங் சென்றார். அவர் யாருடன் சென்றார் என்பது தான் இப்போது ஹைலட்டாக பேசப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய பா.ஜ.க இணையமைச்சர் எல்.முருகனுடன் அவர் சென்றுள்ளார். இருவரும் ஒன்றாகப் போட்டில் பயணிப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மேலும் நடிகையும், தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினருமான குஷ்புவுடன் அவர் கலந்துரையாடிய வீடியோவும், போட்டோவும் டிரெண்டிங் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.