நூலிழையில் உயிர் தப்பிய சூர்யா!.. கங்குவா படப்பிடிப்பு தளத்தில் கேமரா விழுந்ததில் சூர்யாவுக்கு ஏற்பட்ட காயம்!..

By Sarath

Published:

கங்குவா படப்பிடிப்பு தளத்தில் திடீரென நேற்று இரவு நடைபெற்ற விபத்தில் நடிகர் சூர்யாவுக்கு அடிபட்டு இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வரும் படம் கங்குவா. 3d தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இந்த படம் சுமார் 38 மொழிகளில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

கங்குவா படப்பிடிப்பு தளத்தில் விபத்து:

நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி ஆயிரத்தில் ஒருவன், காஷ்மோரா, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 என வரலாற்று டச் கொண்ட படங்களில் நடித்த அசத்தி விட்டார். பிரம்மாண்ட படங்களில் இதற்கு முன்னதாக ஏழாம் அறிவு படத்தில் போத்தி தர்மராக நடித்திருந்த சூர்யா தற்போது கங்குவா படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் போர் வீரனாக நடித்து வருகிறார்.

அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான படப்பிடிப்பு முழுவீச்சில் சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு 11:00 மணி அளவில் சூட்டிங் நடைபெற்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரூப் கேமரா ஒன்று அறுந்து சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் நடிகர் சூர்யா மீது மோதி உள்ளது. அதிர்ஷ்டவசமாக நடிகர் சூர்யாவின் தோள்பட்டையில் அந்த கேமரா மோதியதால் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நடிகர் சூர்யாவுக்கு காயம்:

அதன் காரணமாக கங்கா படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் சூர்யா விரைவில் குணமடைந்து மீண்டும் கங்குவா படப்பிடிப்பில் இணைய வேண்டும் என்ன ரசிகர்கள் ஒரு பிரார்த்தனைகளை சமூக வலைத்தளங்களில் ஹாஷ்டேக் சூர்யா என போட்டு பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் சூர்யாவுக்கு கங்குவா திரைப்படம் பாகுபலி படம் அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு சின்சியராக இயக்குனர் சிறுத்தை சிவா இந்த படத்தில் உழைத்து வருவதாக கூறுகின்றனர். கண்டிப்பாக இந்த முறை நடிகர் சூர்யாவுக்கும் சிறுத்தை சிவாவுக்கும் படம் மிஸ்ஸே ஆகாது என்கின்றனர்.