ஆந்திர பிரதேஷ் மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பாடகி எஸ் ஜானகி. இவர் சிறுவயதிலேயே நாதஸ்வர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசையை கற்றுக் கொண்டார். அதன் பிறகு சென்னைக்கு இவரது குடும்பம் குடி பெயர்ந்த நிலையில் 1957 ஆம் வருடம் தமிழ் திரையுலகில் விதியின் விளையாட்டு என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார்.
பாடகி சொன்ன ஒரே வார்த்தைக்காக தனது பல நாள் பழக்கத்தை விட்ட சிவாஜி.. என்ன விஷயம்னு தெரியுமா..?
அதன் பிறகு இவரது திறமைக்கேற்ப பல வாய்ப்புகள் பல மொழிப் படங்களில் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவராகவே பாடல் எழுதியும் பாடத் துவங்கினார். இவ்வாறாக தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் பெங்காலி என 17 மொழிகளில் கிட்டத்தட்ட 50,000 பாடல்கள் வரை இவர் பாடியுள்ளார். ஆனால் இவர் அதிக பாடல் பாடியது கன்னடத்தில் தான்.
அதோடு மௌன போராட்டம் என்ற தெலுங்கு படத்திற்கு இசையமைத்ததன் மூலம் இசை அமைப்பாளராகவும் எஸ் ஜானகி தன்னை பதிவு செய்துள்ளார். மேலும் இவருக்கு நான்கு தேசிய விருது உட்பட 30க்கும் மேற்பட்ட விருதுகளும் கிடைத்துள்ளது. தமிழக அரசிடம் இருந்து கலைமாமணி விருதும் பாடகி எஸ் ஜானகி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாடகி எஸ் ஜானகி அவர்கள் 1957ஆம் ஆண்டு தான் சினிமாவிற்கு வந்ததாகவும் அதிலிருந்து எத்தனையோ ஆயிரம் கணக்கில் பாடல்களை மிக எளிமையாக பாடியதாகவும் கூறிய இவர் கன்னடத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் தனக்கு மிகவும் சிரமமாக இருந்ததாக கூறியுள்ளார். கன்னட திரைப்படம் ஆன ஹேமாவதியில் தான் அந்த பாடல் இடம் பெற்றிருந்தது.
சும்மா மட்டம் தட்டி பேசாதீங்க..! பெத்த புள்ளைங்கள இப்படியா பேசுறது? பாடகி சின்மயி காட்டம்
சிவ சிவ என்னடா நாழிகே யேகே என்பதே அந்த பாடல். எல் வைத்தியநாதன் இசையில் எம் எஸ் கோபாலகிருஷ்ணன் வயலின் வாசிக்க தோடி ஆபோகி என இரண்டு ராகங்கள் கலந்த கிளாசிக் பாடல் அது. ஒரு வரி ஒரு ராகத்திலும் அடுத்த வரி மற்றொரு ராகத்திலும் என்று இந்த பாடலை பாடுவதற்கு தான் மிகவும் சிரமப்பட்டதாக எஸ் ஜானகி அவர்கள் அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.