பிக்பாஸ் விசித்ரா இத்தனை படங்களில் நடித்துள்ளாரா?

By Bala Siva

Published:

தமிழ் திரை உலகில் சிலுக்கு, அனுராதா, டிஸ்கோ சாந்தி போன்ற கவர்ச்சி நடிகைகள் காமெடி பக்கமே சென்றதில்லை. ஆனால் விசித்ரா கவர்ச்சியுடன் காமெடியில் கலக்கினார்.

நடிகை விசித்ரா சென்னையை சேர்ந்தவர். கடந்த 1992-ம் ஆண்டு வெளியான தலைவாசல் என்ற திரைப்படத்தில் அவர் மடிப்பு ஹம்சா என்ற கேரக்டரில் நடித்தார். சில ஆண்டுகளாக அவரை மடிப்பு ஹம்சா விசித்ரா என்றே ரசிகர்கள் அழைத்து வந்தனர். அந்த அளவுக்கு அந்த கேரக்டர் ரசிகர்களை கவர்ந்தது.

மணிரத்னம் படத்தில் அறிமுகம்.. கமல் பட நாயகி.. எம்.ஆர்.ராதாவின் வாரிசு.. நடிகை நிரோஷா திரைப் பயணம்!

ஆனால் அவர் அறிமுகமானது சின்ன தாய் என்ற திரைப்படத்தில் தான். இந்த படத்தில் அவர் பொன்னம்மா என்ற கேரக்டரில் நடித்திருப்பார். சின்னதாய், தலைவாசல் படங்களை அடுத்து தேவர் மகன், அமராவதி, சபாஷ் பாபு, எங்க முதலாளி, ஜாதி மல்லி, ரசிகன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

vichithra

அதனை அடுத்து அவர் பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அவரது கவர்ச்சி நடனம் ஒரு சில படங்களில் அவரை பிரபலமாக்கியது. இதனை அடுத்து தான் அவர் காமெடி பக்கம் திரும்பினார்.

கவர்ச்சி மற்றும் காமெடி இரண்டையும் ஒரே நேரத்தில் கையில் எடுத்த அவர் முத்து படத்தில் ஒரு காமெடி கேரக்டரில் நடித்து அசத்திருப்பார். அந்தப் படத்தில் அவரது கேரக்டர் வடிவேலுவை நினைத்து காதலிக்கும் கேரக்டராக அமைந்தது.

பாரதிராஜாவின் முதல் நாயகி.. கண்களால் நடிக்கும் நடிகை அருணா..!

வில்லாதி வில்லன் திரைப்படத்தில் குணச்சித்திர கேரக்டரில் நடித்து தன்னால் குணச்சித்திர கேரக்டரிலும் நடிக்க முடியும் என்று நிரூபித்தார். தன்னை எல்லோரும் கவர்ச்சி நடிகையாக பார்த்த நிலையில் சத்யராஜ் மட்டுமே குணச்சித்திர நடிகையாக பார்த்தார் என்று அவர் பல பேட்டிகளில் கூறியுள்ளார். சத்யராஜ் நடித்து, இயக்கிய வில்லாதி வில்லன் என்ற திரைப்படத்தில் நடிகை விசித்ரா அம்சவல்லி என்ற அமைச்சர் கேரக்டரில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

vichithra

இதன் பிறகு அசுரன், ரகசிய போலீஸ், பெரிய குடும்பம், தொட்டா சிணுங்கி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் அவர் நடித்துள்ளார்.

நடிகை விசித்ரா திருமணம் செய்து கொண்ட பின்னர் திரையுலகில் இருந்து கிட்டத்தட்ட விலகினார். அதன் பிறகு நடிக்க வாய்ப்பு வந்தபோதிலும் அவர் நடிக்கவில்லை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘ஜோஸ்வா இமை போல் காக்க’ என்ற திரைப்படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் ஒரு திருப்புமுனையாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் அவர் மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் காமெடியாகவும் அதே நேரத்தில் தனது சமையல் திறமையையும் நிரூபித்தார். அவருக்கு இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது இடம் கிடைத்தது.

நீண்ட இடைவேளைக்குப் பின்னர் தன்னை ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளம் காட்டியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் என்று அவர் ஒரு சில பேட்டிகளில் கூறியுள்ளார். குக் வித் கோமாளி மட்டுமின்றி வேறு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மாமி சின்ன மாமி, வாழ்க்கை, கோகிலா எங்கே போகிறாள் ஆகிய சன் டிவியில் ஒளிபரப்பான தொடர்களிலும், ராஜ் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தி, ஜி டிவியில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.

தற்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் விசித்ரா, உள்ளே வந்த ஒரு சில வாரங்களில் எலிமினேஷன் செய்யப்படுவார் என்று நினைத்த நிலையில் தற்போது அவர் இளம் போட்டியாளர்களுக்கு இணையாக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பாக மாயா மற்றும் பூர்ணிமா குரூப்புக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 வயது முதல் நடிப்பு.. 45 ஆண்டுகளில் 750 படங்கள்.. நடிகை சண்முகப்பிரியாவின் திரையுலக பயணம்..!

மொத்தத்தில் நடிகை விசித்ரா காமெடி மற்றும் கிளாமர் நடிகையாக இருந்து பின்பு தொலைக்காட்சி தொடர்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்து வருகிறார்.