சென்னை தி.நகரில் சிறிய பாத்திரக்கடையாக 1970-ல் ஆரம்பிக்கப்பட்டு இன்று இந்தியாவின் முன்னணி சில்லறை விற்பனை ஷாப்பிங் ஸ்பாட்டாக திகழ்கிறது சரவணா ஸ்டோர்ஸ். கிட்டத்தட்ட 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள், பில்லியன்களில் வர்த்தகம் என இந்தியாவின் பிரம்மாண்ட தொழில் நிறுவனமாகத் திகழ்கிறது சரவணா ஸ்டோர்ஸ். தற்போது இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக சரவணண் அண்ணாச்சி செயல்பட்டு வருகிறார்.
தனது அபார விளம்பர யுக்தியால் பொதுமக்களை வெகுவிரைவில் சரவணா ஸ்டோர்ஸ். தமிழ் சினிமாவில் லேட்டஸ்ட்டாக எந்த ஹீரோ, ஹீரோயின்கள் டாப்-ல் இருக்கிறார்களோ அவர்களை வைத்து விளம்பரப்படங்களை எடுத்து அதை ஒவ்வொரு இல்லங்களிலும் சென்று சேர்ப்பது இவர்களின் விளம்பர யுக்தி. இதனால் சரவணா ஸ்டோர்ஸ் என்றால் சிறிய குழந்தைக்குக் கூட தெரியும் அளவிற்கு வளர்ந்தது இவர்கள் நிறுவனம்.
இந்நிலையில் நடிப்பின் மீது அண்ணாச்சிக்கு ஆசை ஏற்பட தனது நிறுவன விளம்பரத்திற்கு தானே மாடலாக நடித்து வரவேற்பைப் பெற்றார். மீம்ஸ்கள் வந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் நோக்கத்தில் குறியாக இருந்து திடீரென சினிமா நாயகன் அவதாரம் எடுத்தார்.
தனது நிறுவன விளம்பரப் படங்களை இயக்கிய இரட்டைஇயக்குநர்கள் ஜேடி ஜெர்ரியை வைத்து தி லெஜண்ட் என்ற பெயரில் படத்தைத் தயாரித்து தானே ஹீரோவாக நடித்தார். பான் இந்தியா படமாக வெளியான தி லெஜண்ட் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றது. தன்னை மீம்ஸ்களால் வைத்துச் செய்தவர்களுக்கு நடிப்பின் மூலம் பதிலடி கொடுத்தார் லெஜன்ட் சரவணன் அண்ணாச்சி.
திரையுலகில் ஜெயலலிதாவின் முதல் ஹீரோ இவர்தானா? நடிப்பில் சிவாஜியுடன் போட்டிபோட்ட நாயகன்
இவர் தொழிலதிபராகவும் இருந்து வருவதால் அண்மையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வர்த்த மையக் கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதுதான் இப்போது ஹாட் டாபிக்காக உள்ளது. அதில், “இந்த காக்கா, கழுகு கதை, இவருக்கு இந்தப் பட்டம், இவருக்கு இந்தப்பட்டம் போன்றவற்றால் யாருக்கும் எந்த புரயோஜனமும் கிடையாது. நாம உழைச்சாதான் உயர முடியும். நம்ம உயர்ந்தால் நம்ம நாடும் முன்னேறும்.“ என்று அந்நிகழ்ச்சியில் பேசினார்.
சரவணண் அண்ணாச்சி இவ்வாறு பேசியது திரையுலகில் ஏற்கனவே காக்கா, கழுகு சூப்பர் ஸ்டார் பட்டங்கள் விவாதமாகி வரும் நிலையில் தனது பேச்சால் விஜய் மற்று ரஜினியை வம்புக்கு இழுத்துள்ளார்.