அண்மையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி ஓவர் ஸ்பீடில் சென்று விபத்தில் மாட்டி பின் உயிர்பிழைத்து கம்பி எண்ணியவர் ரைடர் டிடிஎப் வாசன். தற்போது ஜாமீனில் வெளிவந்து தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். இவரின் ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இவரின் சர்ச்சை ஓய்வதற்குள் இதே போன்று அடுத்த சர்ச்சை தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.
தற்போது நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியின் மகனான யாத்ரா தான் இப்போது போலீசில் அபராதம் கட்டியிருக்கிறார். தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி இருவரும் பரஸ்பரம் பிரிந்தாலும் அவர்களின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரும் மாறி மாறி பெற்றோருடன் வசித்து வருகின்றனர். இதில் மூத்த மகன் யாத்ரா அப்படியே தனுஷை உறித்து வைத்தாற் போல் உள்ளார். சின்ன வயது தனுஷை பார்ப்பது போல் இருக்கும்.
இந்நிலையில், யாத்ராவிற்கு தற்போது மைனர் வயதை தாண்டவில்லை. இன்னும் 18 வயது ஆகாத நிலையில் சாலையில் R15 பைக்கில் சென்று வில்லங்கத்தை விலைக்கு வாங்கியுள்ளார். இவர் பைக் ஓட்டிப் பழகுவதற்காக உயர்ரக அதுவும் CC அதிகமுள்ள R15 பைக்கை எடுத்து ஓட்டியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் அவருடன் உதவியாளர் ஒருவர் ஓட்டிப் பழகிக் கொடுப்பது போல் யாத்ரா பைக் ஓட்ட அவரின் பின்னே பாதுகாப்புக்காக சென்றுள்ளார்.
ஒரே வரியில் வாழ்த்தைச் சொன்ன விக்னேஷ் : அன்பில் உருகிப் போன நயன்தாரா
18 வயது பூர்த்தியாகமால் எப்படி பொதுவெளியில் பைக் ஓட்டலாம். அதுவும் ஹெல்மெட் இல்லாமல் ஓட்டியுள்ளார். பழக வேண்டுமென்றால் தனி இடத்தில் பழக வேண்டும். மக்கள் நடமாடும் வீதிகளில் பழகலாமா என்று கமெண்ட்கள் குவிந்தன. இதனால் இந்த வீடியோ சர்ச்சையானதை அடுத்து போக்குவரத்துப் போலீசார் யாத்ராவிற்கு தலைக் கவசம் இல்லாமல் பைக் ஒட்டியதற்காக ரூ.1000 அபராதம் விதித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
ஆனால் டிடிஎப் வாசன் ரசிகர்கள் இன்னமும் விடாமல் வாசனுக்கு ஒரு ரூல்ஸ், தனுஷ் மகன் என்றதுமே அவருக்கு ரூல்ஸா என்று விமர்சனம் செய்து வருகின்றனர். வாசனின் ஓட்டுநர் உரிமம் இரத்து செய்யப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.