ஒரே வரியில் வாழ்த்தைச் சொன்ன விக்னேஷ் : அன்பில் உருகிப் போன நயன்தாரா

தமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவிற்கு இன்று பிறந்த நாள். திரையுலகமே சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்க அவரின் கணவரும், இயக்குருமான விக்னேஷ் சிவன் மனைவிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழில் சரத்குமார் ஜோடியாக இயக்குநர் ஹரி இயக்கிய ஐயா படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நயன்தாரா. கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் டயானா குரியன் என்ற தமது இயற்பெயரை சினிமாவிற்காக நயன்தாரா என்று மாற்றிக் கொண்டார்.

முதல் படத்திலேயே ‘ஒரு வார்தை பேச‘ பாடலின் மூலம் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்த நயன்தாராவிற்கு அடுத்த படமே அடித்தது லக். சூப்பர் ஸ்டார் நடித்த பி.வாசுவின் இயக்கத்தில் வெளியான சந்திரமுகியில் ரஜினிக்கு ஜோடியானார். அப்போது டாப் லிஸ்ட்டில் இருந்த திரிஷா, அசின், ஸ்நேகா, ஸ்ரேயா போன்ற முன்னணி ஹீரோயின்கள் வாயடைத்துப் போயினர்.

தொடர்ந்து கதைகளைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி தனக்கென நடிப்பில் தனி முத்திரையைக் கொடுத்து நடிப்பில் உச்சம் தொட்டார் நயன்தாரா. அதுவரை ஹீரோக்களுடன் டூயட் பாடிக் கொண்டிருந்த நயன்தாராவிற்கு இயக்குநர் கோபிநயனார் இயக்கிய அறம் படம் இவரை லேடி சூப்பர் ஸ்டார் ஆக்கியது. தொடர்ந்து ஐரா, நெற்றிக்கண், கோலமாவு கோகிலா, o2 போன்ற படங்களில் கதையின் நாயகியாக நடித்து ரசிகர்களிடையே ‘லேடி சூப்பர் ஸ்டார்‘ என்ற பட்டத்தை வாங்கினார்.

தளபதி எஸ்கேப்… ஆனால் தல நிலைமைதான் என்னவோ… நேக்கா திட்டப்போடும் திரையுலகம்…

இந்நிலையில் நானும் ரவடிதான் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய போது ஹீரோயினாக நடித்த நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாகவே அறிவித்தனர். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு இருவருக்கும் பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது.

தற்போது இவர்களுக்கு வாடகைத் தாய் முறையில் உயிர், உலக், என இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். இன்று நயன்தாராவின் 39-வது பிறந்த நாளையொட்டி ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்க கணவர் விக்னேஷ் சிவன் அவர்களது குழந்தைகளின் பெயரைப் போற்றும் வகையில் ‘என் உயிர் மற்றும் உலகமே இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்‘ என்று கேக்கில் பதிவிட்டு வாழ்த்துக் கூறியுள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் போட்ட இந்தப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews