15 பேர் கூட தியேட்டர்ல இல்ல…சின்ன படங்களுக்கு இதான் நிலைமையா? புலம்பிய கிடா இயக்குநர்

By John A

Published:

தீபாவளி அன்று ஆட்டுக்கிடா விற்பனை சக்கைப் போடு போட்டதே தவிர கிடா என்ற படம் வந்ததே நிறைய பேருக்குத் தெரியவில்லை. ஆட்டுக்கறி வாங்க கியூவில் நின்ற கூட்டம் ஏனோ கிடா படத்தை ஈயாட வைத்து விட்டது. சின்ன பட்ஜெட் படங்களுக்கு இதான் நிலைமையா என்று புலம்பி பதிவிட்டிருக்கிறார் இயக்குநர் வெங்கட்.

தீபாவளி ரேஸில் ஜப்பான், ஜிகர்தண்டா xx படத்துடன் கிடா என்ற படமும் மோத வந்த வேகத்திலேயே பெட்டிக்குள் சுருண்டு படுத்துவிட்டது. மறைந்த நடிகர் பூ ராமு நடிப்பில் வெளியான இப்படத்தை இயக்குநர் வெங்கட் இயக்கியிருந்தார். தீபாவளிக்கு புதுத் துணிபோட ஆசைப்படும் தன் பேரனின் ஆசையை தாத்தா எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்பது தான் கதை. தீபாவளியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படம் தீபாவளி அன்றே ஜொலிக்கவில்லை.

ஆனால் பல்வேறு சர்வதேச திரைப்பட போட்டிகளில் பங்குபெற்று விருதுகளை வரிசைகட்ட கல்லாவும் கட்டும் என்ற நம்பிக்கையில் திரையில் வெளியாக அது ஊத்திக் கொண்டது. இதனால் இப்படத்தின் இயக்குநர் சமூக வலைதளங்களில் தனது கருத்தைப் பதிவிட்டிருக்கிறார்.

முதல் இடத்தில் அஜீத், நான்காவது இடத்தில் விஜய் எதுல தெரியுமா? விஜய் ஆண்டணியும் Top 5-ல இருக்காரே..!

அப்பதிவில்,“ இன்று காலை என் நண்பர்கள் இருவர் கிடா படம் பார்க்க காசி டாக்கீஸ் போயிருக்கிறார்கள்.. கூடவே ஒரு எட்டு பேரும் கிடா எடுக்க வந்திருக்கிறார்கள். ஆனால் தியேட்டர் நிர்வாகம் பதினைந்து பேர் இருந்தால் தான் படம் போடுவோம் என்றிருக்கிறார்கள்.

நண்பர்கள் பரவாயில்லங்க பதினைஞ்சு டிக்கெட் தான நாங்களே இ்ன்னும் அஞ்சு டிக்கெட் எடுக்கிறோம்னு சொல்லியும் படம் போடல. ஷோ கேன்சல். எங்கோ ரிவியூ படிச்சிட்டு படம் பார்க்க வர்றவங்ககிட்ட என்ன பதில் சொல்றதுன்னு எனக்கும் தெரியல. நல்ல படம்னு தேடி வந்தோம்னு சொல்றாங்க. ஆனா ஷோ கேன்சல். இப்படிலாம் நடக்கும்னு தெரிஞ்சு தான சின்னபடங்கள் வருதுன்னு நீங்க சொல்லவர்றது தெரியுது.

ஆனா ஆதங்கத்த எங்க கொட்டுறது . அதான் இத ஷேர் பண்ணுனேன். மதுரையில ஒரு ஷோ தான் குடுத்தாங்க அங்கயும் இப்ப ஷோ காட்டல. மக்களே உங்களின் அருகே எதோ ஒரு ஷோ கிடா ஓடுச்சுன்னா போய் பாருங்க. கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.. நன்றி“ இவ்வாறு எமோஷனலாக அப்பதிவில் தெரிவித்துள்ளார் இயக்குநர் வெங்கட்.