முதல் இடத்தில் அஜீத், நான்காவது இடத்தில் விஜய் எதுல தெரியுமா? விஜய் ஆண்டணியும் Top 5-ல இருக்காரே..!

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற பட்டமும், தலயா, தளபதியா என்ற சண்டையும் இரு நடிகர்களும் பல்வேறு அறிவுரைகள் வழங்கினாலும் சமூக வலைதளங்களில் சண்டை ஓய்ந்த பாடில்லை. யார் படம் ரிலீஸ் ஆனாலும் இருதரப்பு ரசிகர்களும் மீம்ஸ்களை வைத்துச் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர்.

தற்போது இன்னொரு புள்ளிவிபரத்தில் அஜீத் முதலாவதாக இருக்கிறார். அது என்னவெனில் TRP எனப்படும் டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட். இதுவரை எந்தப் படம் தொலைக்காட்சியில் அதிக நேரமும், ரசிகர்களாலும் பார்க்கப்பட்டுள்ளது என்ற புள்ளிவிபரம் அது. இந்த வரிசையில் முதல் 5 இடத்தைப் பெற்றுள்ள படங்களின் விபரம் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வகையில் டாப் 5-ல் முதலிடம் பெறுவது அஜீத் நடித்த விஸ்வாசம் திரைப்படம் தான். குடும்பங்கள் கொண்டாடிய இந்தப்படம் குறிப்பாக படத்தில் இடம் பெற்று இருக்கும் கண்ணான கண்ணே பாடலுக்காகவே பலரும் இந்த படத்தை இன்றும் ரசித்து பார்க்கிறார்கள்.

விருது மழையில் நனையும் ‘சரஸ்‘ மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த குறும்படம்

இதற்கு அடுத்ததாக யாருமே எதிர்பார்க்காத வகையில் விஜய் ஆண்டனி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். பிச்சைக்காரன் படம் தான் அது. தாயின் உயிரைக் காப்பாற்ற 48 நாட்கள் தான் யாரென்று தெரியாமல் விஜய் ஆண்டனி நடித்துப் பெயர் வாங்கிய இந்தப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மூன்றாவது இடத்தில் இருப்பவர் நம் சூப்பர் ஸ்டார் தான். அண்ணாத்த படம் மூலம் குடும்பக் கதையில் நடித்த ரஜினியின் இந்தப் படம் TRP-யில் பெற்றிருக்கும் இடம் 3.

நான்காவது இடத்தில் இருப்பவர் நம் தளபதி விஜய். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் திரைப்படம் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்ததாக சிவகார்த்திகேயன், சமந்தா, நெப்போலியன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான சீமராஜா ஐந்தாம் இடம் பெற்றுள்ளது.

மேலும் தொலைக்காட்சியில் மக்கள் குடும்பப் பாங்கான, சென்டிமெண்ட் கதைகளைக் கொண்ட படங்களையே இரசித்துப் பார்க்கின்றனர் என்பதை இந்தப் பட்டியல் உணர்த்துகிறது. இதனால் தான் சீரியல்கள் இன்னும் தொலைக்காட்சிகளில் சக்கைப் போடு போடுகின்றன.

இந்த டாப் 5-ல் சிறுத்தை சிவா இயக்கிய படங்களே இரண்டு இடம்பெற்றுள்ளதும் கவனிக்கத்தக்கது.