சினிமாவில் ஒரு சில நடிகர்களைப் பார்க்கும் போது நம் வீட்டு உறவினர் போலவே தோற்றமளிப்பார்கள். அந்த மாதிரியான இயல்பைக் கொண்டவர்தான் விஜய்ஆண்டனி. நாகர்கோவிலைச் சேர்ந்த விஜய் ஆண்டனியை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது சுக்ரன் படத்தில் விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். ஆனால் அதற்கு முன்பே டிஷ்யூம் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்தது. தொடர்ந்து தன்னுடைய தனிப்பட்ட இசை ரசனையால் 90’s கிட்ஸ்-ன் மனங்கவர்ந்த இசையமைப்பாளர் ஆனார் விஜய் ஆண்டனி.
ஆரம்பத்தில் ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி வந்த விஜய் ஆண்டனி பின் ‘நான்‘ படம்மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். தொடர்ந்து இசையமைப்பதை குறைத்து நடிப்பதில் தீவிரம் காட்டினார். பிச்சைக்காரன் திரைப்படத்தின் வெற்றி இவரை கடைக்கோடி ரசிகன் வரை கொண்டு சேர்த்தது. இந்நிலையில் விஜய் ஆண்டனி பேட்டி ஒன்றில் தன் காதல் மனைவி பாத்திமாவை எவ்வாறு கரம்பிடித்தேன் என்று கூறியுள்ளார்.
சுக்ரன் படம் ரிலீஸ் ஆகி பாடல்கள் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்த காலம் அது. அப்போது சன்டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றிய பாத்திமாவிடம் இருந்து ஒரு அழைப்பு வர இதுவே காதலுக்கு பிள்ளையார் சுழி போட்டது. முதல் போனிலேயே ஒரு மணி நேரம் பேசினார்களாம்.
சிம்பு சொன்ன ஒரே ஐடியா : தடாலென 30 கிலோ குறைந்த நடிகர் பாலா-இதான் அந்த சீக்ரெட்
அதன்பின் இருவரின் வீடும் அருகருகே அமைந்தால் தினமும் சந்திப்பது, கருத்துக்களைப் பரிமாறுவது என இருக்க மூன்றே நாட்களில் உங்கள் மாப்பிள்ளை லிஸ்ட்டில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என விஜய் ஆண்டனி பாத்திமாவிடம் தன் காதலைத் தெரிவித்திருக்கிறார். அதன்பின் இருவரது திருமணமும் நடந்ததாம். வீட்டில் கூட சொல்லாமல் நான் பட இயக்குனரிடம் என் மனைவி என்று முதன் முதலில் அறிமுகப்படுத்தி வைத்தாராம். இவ்வாறு தனது காதல் கதை பற்றி விஜய் ஆண்டனி கூறிய பதிவு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட விஜய் ஆண்டனியின் மகள் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டது திரையுலகிலும், தமிழகத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய் ஆண்டனி தமிழின் முதல் நாவல் ஆசிரியரான எழுத்தாளர் மயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேரன் என்பதும் பலரும் அறியாத தகவல்.