சிம்பு சொன்ன ஒரே ஐடியா : தடாலென 30 கிலோ குறைந்த நடிகர் பாலா-இதான் அந்த சீக்ரெட்

By John A

Published:

தமிழில் முதன்முதலாக பள்ளிப் பருவ காதலையும், நட்பையும் சின்னத்திரையில் கொண்டு வந்த சீரயல் என்றால் அது கனாகாணும் காலங்கள் தொடர். விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்தத் தொடரில் நடித்த பலர் இன்று வெள்ளித்திரையில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். பிளாக் பாண்டி, பாலசரவணன், கவின், ரியோ, இர்பான் போன்ற பலருக்கும் இந்த சீரியல் நல்ல அடையாளம் கொடுத்தது.

இதில் நடித்த பால சரவணன் என்ற பாலா தற்போது முன்னணி நடிகர்களுடன் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். குட்டிப்புலி படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. தொடர்ந்து ஈஸ்வரன், டான் போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் பேட்டி ஒன்றில் பால சரவணன் கூறும்போது, “ஈஸ்வரன் படத்தில் சிம்பு சாருடன் நடித்த போது 104 கிலோ உடல் எடை இருந்ததாகவும், பின்னர் டான் பட வாய்ப்பு வரும் போது இயக்குநர் உடல் எடைய குறைக்கச் சொல்லியதால் தீவிர டயட்டில் இருந்தேன். அப்போது சிம்பு கூறிய அட்வைஸ் தான் பெரிய உத்வேகம் கொடுத்தது என்றார்.

“மனசுல பெரிய அழகின்னு நெனப்போ..? அவங்க மாயா இல்ல ஆயா..!“ வெளுத்து வாங்கிய ஷகீலா

அதுஎன்னவென்றால் நன்கு பசியை உணர்ந்து சாப்பிட வேண்டும் என்பது தான். நாம் பசியின் அருமையை தெரிந்து கொண்டாலே நம்மை உணர்ந்து விடுவோம் என்றும், என்னதான் நாம் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டதில்லை என்றாலும் பசியின் அருமையை பல நேரங்களில் தானும் உணர்ந்துள்ளதாகவும் சிம்பு கூறியதை அடுத்து தானும் அந்த முறையை பின்பற்றுவதாக பால சரவணன் கூறியுள்ளார்.

மேலும் ஈஸ்வரன் படம் முடித்து வருவதற்குள் டான் படத்திற்காக 30 கிலோ வரை எடை குறைத்ததாகவும், அந்த சமயத்தில்தான் விலங்கு வெப்சீரிஸ் வாய்ப்பும் வந்ததாகப் பேட்டியில் கூறினார்.

மதுரையைச் சொந்த ஊராகக் கொண்ட பால சரவணன் தான் நடிக்க வரவில்லையென்றால் புரோட்டா கடை வைத்திருப்பேன் என்றும், எனக்குப் பிடித்தது ஹோட்டல் தொழில் தான் என்றும், அவ்வளவு தூரம் புரோட்டா தனக்கு மிகவும் பிடித்தமான உணவு என்று அந்தப் பேட்டியில் பால சரவணன் கூறியிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் பால சரணவன் நடிதுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.