“மனசுல பெரிய அழகின்னு நெனப்போ..? அவங்க மாயா இல்ல ஆயா..!“ வெளுத்து வாங்கிய ஷகீலா

பிக்பாஸ் சீசன் 7 பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அண்மையில் பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என பிரதீப் ஆண்டனி ரெட்கார்டு கொடுத்து வெளியேற்றப்பட சோஷியல் மீடியாவே அதிர்ந்து போனது. பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் கூட சகட்டுமேனிக்கு கமெண்ட்களில் கமலுக்கு எதிராகவும், பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிராகவும் கழுவிக் கழுவி ஊற்றினர். பிரபலங்களும் இதுகுறித்து வலைதளங்களில் பிரதீப் ஆண்டனிக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தினமும் பிக்பாஸ் சீசன் 7 பற்றிய அப்டேட்களையும், அன்றைய நிகழ்ச்சி குறித்த கருத்துக்களையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும், நடிகையுமான ஷகீலா.

கார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு பழக்கமா? பாவம் சார் யூனிட் இனிமே இப்படி செய்யாதீங்க..!

இதன்படி சமீபத்திய எபிசோட் ஒன்றில் பங்கேற்பாளர் மாயா குறித்து ஷகீலா தெரிவித்த கருத்துக்கள் வைரலாக வலம் வருகிறது. அதில், “மாயா என்பவர் ஒரு ஆயா என்றும், கமல்சார் மற்றம் தளபதி விஜய் படத்தில் நடித்திருந்தாலும் அவரின் பின்புலம் எனக்கு தெரியவில்லை. தன்னை பெரிய அழகின்னு நெனச்சுக்கிட்டு இருக்காங்க. நான் ஆயா என்று ஒத்துக் கொள்கிறேன். அதேபோல் மாயாவும் ஆயா தான் என்று ஒத்துக் கொள்ள வேண்டும்“ என்றும்,

மேலும் “கேப்டன் ஆகிவிட்டதால் பைத்தியக்காரத் தனமாக பேசுவதும், விசித்ரா ஒரு பிரஷ் கேட்ட பொழுது கூட விவாதம் செய்ததும், தற்போது கானா பாலாவைத் தவிர அனைத்து பசங்களுக்கும் பாதுகாப்பு தேவை“ எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே பிரதீப் ஆண்டனி வெளியேறியது குறித்து பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் ஆம்பளைங்க சுடிதார் அயர்ன் பண்ணிக் கொடுக்கவும், காதல் வசனம் பேசவும் தான் லாயக்கா என்று பேசியது வைரலான நிலையில் தற்போது அவரின் இந்தப் பேச்சும் அதிர்வலைகளை எற்படுத்தியிருக்கிறது.

மேலும் நடிகை காஜல் பசுபதியும் தனது பங்கிற்கு தினமும் பிக்பாஸ் வீட்டில் நடப்பவை பற்றி விமர்சனம் அளித்து வருகிறார். ஏற்கனவே விசித்ரா, கூல்சுரேஷ், ஜோவிகா போன்றோர் கூறிவரும் கருத்துக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் இவர்களும் தன் பங்கிற்கு விமர்சனம் அளித்து வருவது நிகழ்ச்சியை விறுவிறுப்பு குறையாமல் கொண்டு செல்கிறது என்றே சொல்லலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews