கார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு பழக்கமா? பாவம் சார் யூனிட் இனிமே இப்படி செய்யாதீங்க..!

By John A

Published:

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் மூலம் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவருக்கும், விஜய் சேதுபதிக்கும் நல்ல அடையாளத்தை கொடுத்த பீட்சா திகில் படத்தை எடுத்து சினிமா உலகில் ஹாரர் படங்களுக்கு புது மொழியை எழுதியவர்.

இதையடுத்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து இறைவி படம் எடுக்க அது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜிகர்தண்டா படம் மூலம் இந்திய திரையுலகையே கவனிக்க வைத்த கார்த்திக் சுப்புராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பேட்ட படம் இயக்கும் அளவிற்கு உயர்ந்தார்.

பின்னர் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், பிரபுதேவாவின் மௌன திகில் படமான மெர்குரி, விக்ரம் நடித்த மகான் போன்ற வித்தியாசமான கதைக்களங்களை எடுத்து கவனிக்க வைத்தவர் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

தற்போது ஜிகர்தண்டா XX படத்தை இயக்கி மீண்டும் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார். வசூலிலும், விமர்சனத்திலும் தீபாவளி ரேஸில் முந்திக் கொண்டிருக்கும் ஜிகர்தண்டா xx  ராகவா லாரன்ஸ்-க்கு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் விஷாலுக்கு இப்படி ஒரு மனசா..? ஷுட்டிங் ஸ்பாட்டை நெகிழ்ச்சியாய் மாற்றிய தருணம்

இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஷுட்டிங் ஸ்பாட்டில் நடந்து கொள்ளும் விதம் குறித்து அவர் ஒரு பேட்டியில் குறிப்பிடுகையில், ஷுட்டிங் ஸ்பாட்டில் வேலை என்று வந்து விட்டால் நேரம் பார்ப்பதே இல்லையாம். தொடர்ந்து பல மணி நேரங்கள் கூட பிரேக் இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவேன். இதனால் மதிய உணவு இடைவேளை என்பதையே மறந்து விடுவேன். அதுவே தனக்கு பழக்கமாகி விட்டது என்றார்.

பேட்ட படத்தின் ஷுட்டிங்கின் போது அவ்வாறு நேரம் போவேத தெரியாமல் போக  மதிய உணவு இடைவேளையை கவனிக்காததால் யூனிட் சோர்வானதை அறிந்து பிரேக் விட்ட பொழுது மொத்த பட யூனிட்டும் கை தட்டினர் என்று கூறினார்.

தற்போது ஜிகர்தண்டா xx படப்பிடிப்பிலும், இதே நிலை தொடர ராகவா லாரன்ஸ் மாஸ்டர் சோர்வுற்றதாகவும், அவரது தாய் இதுகுறித்து தன்னிடம் கூறியதாகவும் கார்த்திக் சுப்புராஜ் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.  கார்த்திக் சுப்புராஜ் இந்த டெடிகேஷனைக் கண்டு பாராட்டும் நெட்டிசன்கள் அதே வேளையில் உடன் பணிபுரியும் படக்குழுவினரின் உடல்நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.