ஆனாலும் விஷாலுக்கு இப்படி ஒரு மனசா..? ஷுட்டிங் ஸ்பாட்டை நெகிழ்ச்சியாய் மாற்றிய தருணம்

சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி‘ படம் நடிகர் விஷாலுக்கு வெற்றியைக் கொடுக்க மீண்டும் கம்பேக் கொடுத்தார். நீண்ட இளைவெளிக்குப் பின் வித்தியாசமான தோற்றத்தில் டைம் டிராவல் பற்றிய படத்தில் நடித்த விஷாலுக்கு இந்தப் படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பும் இந்தப் படத்திற்கு மிக பக்க பலமாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் ஹரி இயக்கும் விஷால் 34 படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

ஏற்கனவே இயக்குநர் ஹரியின் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களில் நடித்து வெற்றியைக் கொடுத்த விஷால் தற்போது மீண்டும் அவருடன்  கை கோர்த்துள்ளார். நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் பிஸியாக இருக்கும் விஷால் தற்போது ஷுட்டிங் ஸ்பாட்டில் செய்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஷால் 34 படத்தில் பணியாற்றி வரும் அனைத்து கலைஞர்களுக்கும் படப் பிடிப்புத் தளத்திலேயே தீபாவளி விருந்து வைத்துள்ளார். சமபந்தி கறி விருந்தினை தன் ஏற்பாட்டில் செய்து கலைஞர்களை மகிழ்வித்துள்ளார். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்தனர். இயக்குநர் ஹரியும் விஷாலின் சமபந்தி விருந்தில் பங்கேற்று தானும் அவருடன் உணவருந்தினார்.

மணிரத்னம் படத்தில் அறிமுகம்.. கமல் பட நாயகி.. எம்.ஆர்.ராதாவின் வாரிசு.. நடிகை நிரோஷா திரைப் பயணம்!

அண்மையில் விஷால் இது போன்ற பல நல்ல செயல்களை முன்னெடுத்துச் செய்து வருகிறார். சமீபத்தில் ஷுட்டிங் நடந்த ஒரு கிராமத்தில் தண்ணீர் இல்லையென மக்கள் முறையிட உடனடியாக களத்தில் இறங்கி போர்வெல் மற்றும் குடிநீர்த் தொட்டி அமைத்துக் கொடுத்தார்.

Vishal 1

மேலும் மத நல்லிணக்கதைப் பின்பற்றும் நோக்கில் அனைத்து சமய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பது, பொது வெளியில் தான் உண்ணும் போது கடவுள்களை வணங்கி உணவினைக் கையில் எடுப்பது போன்ற பழக்கங்களை பின்பற்றி வருகிறார். தனது ரசகிர் மன்றம் சார்பில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.

இது போன்ற செயல்களினால் தளபதி விஜய் போல விஷாலும் அரசியலுக்கு வரலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் விஷாலின் ரசிகர்களும் அவர் எப்போது அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews