கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘நாளைய இயக்குனர்’ மூலம் கார்த்திக் சுப்புராஜின் திறமை வெளிச்சத்திற்கு வந்தது. அந்த வரவேற்பைத் தொடர்ந்து படங்களை இயக்குவதற்கு முயற்சித்தார். ஜிகர்தண்டா கதையை பீட்சாவுக்கு முன்பு எழுதியிருக்கிறார்.
இருந்தாலும் பட்ஜெட் அதிகமாக இருந்ததால், சிறு பட்ஜெட்டில் வெற்றிப்படம் கொடுக்க வேண்டியிருந்தது. அப்படி வந்த கதைதான், பீட்சா இந்த படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் மட்டும்தான் படம் முழுவதும் வருவார்கள்.
சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நல்ல தரமான த்ரில்லர் படமாகும். கதை, திரைக்கதை இந்த இரண்டு மட்டுமே பீட்சா படத்தின் முக்கிய அம்சமாகும். அதை கார்த்திக் சுப்புராஜ் சிறப்பாக செய்திருப்பார். சந்தோஷ் நாராயணின் இசை படத்திற்கு மற்றொரு பலம். மெர்குரி, மகான் , ஜகமேதந்திரம் இந்த படங்களை தவிர ஜிகர்தண்டா, இறைவி,பேட்ட படங்கள் நல்ல வரவேற்ப்பையும், வசூலையும் பெற்றன.
இதற்கிடையில், ஸ்டேன் பென்ஞ்ச் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். தற்போது வெளியாகி இருக்கும் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. தொடர்ந்து படங்களுக்கு ஸ்கிரிப்ட்களை எழுதி வரும் போது, ஒரு கதையை தனது அசிஸ்டென்ட்களிடம் கொடுத்து படிக்க சொல்லி இருக்கிறார். அவர்கள் கதை பயங்கரமான பிரம்மாண்ட பின்னணியை கொண்டிருக்கிறது.
அதோடு இக்கதை அரசியல் களத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது. இந்தமாதிரியான கதைகளை நீங்கள் இயக்க இன்னும் காலமெடுக்கும். இதனால், ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர்களுக்கு தான் இந்த கதை சரி வரும் எனக் கூறியிருக்கிறார்கள். அக்கருத்தினை ஏற்றுக் கொண்ட கார்த்திக் சுப்புராஜூம் தன்னிடம் ஒரு கதை இருப்பதாக ஷங்கரிடம் கூறியிருக்கிறார். சுஜாதாவின் மறைவிற்கு பின், ஷங்கர் படங்களின் கதையில் கடுமையான தொய்வு காணப்பட்டது.
நல்ல கதைக்காக காத்திருந்த ஷங்கர், கார்த்திக் சுப்புராஜின் கதையை ஏற்று படமாக்க தொடங்கி விட்டார். அதுவே தெலுங்கில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே சூர்யா நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படமாகும். மிகப்பிரம்மாண்டமாக உருவாகி வரும்‘கேம் சேஞ்சர்’ 2024ல் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.