மிதுன ராசியினைப் பொறுத்தவரை கார்த்திகை மாதம் ஓரளவு சுமாரான மாதமாக இருக்கும். நீங்கள் பெரிய அளவிலான விஷயங்களை அடையாவிட்டாலும் நினைத்த காரியங்களை நடத்தி முடிப்பீர்கள்.
புதன் பகவான் 6 ஆம் இடத்தில் மறைகிறார்; மேலும் 6 ஆம் இடத்தில் இருக்கும் செவ்வாயுடன் கூட்டணி அமைக்கின்றார். செவ்வாய்- புதன் பகவான் கூட்டணி உங்களுக்குப் பல போராட்டங்களைக் கொடுப்பதாய் இருக்கும்.
உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!
லக்கினாதிபதி பலவீனமானதாக இருப்பதால் சுப ஸ்தானங்கள் வேலை செய்யாது. உங்களிடம் இந்தப் போராட்ட காலகட்டங்களிலும் நல்ல எண்ணம், நல்ல செயல் இருக்கும்.
கடன் சார்ந்த தொல்லைகள் அதிகரிக்கும், முடிந்தளவு வீண் விரயச் செலவுகளைத் தவிர்த்து கடனை அடைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; குறிப்பாக எந்தவொரு விஷயத்தினைச் செய்யும் போதும் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும்.
வாக்குஸ்தானம் பலமானதாக உள்ளது. தைரியம் அதிகரித்துக் காணப்படுவீர்கள். இந்த காலகட்டத்தில் துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்த விஷயத்தினை முடித்துக் காட்டுவீர்கள்.
புதன் பகவானின் இட அமைவால் வீடு, மனை வாங்கும் நிலையானது ஏற்படும். ஆதாயம் தரும் வகையில் பணம் சார்ந்த முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள்.
வண்டி, வாகனங்கள் ரீதியாகச் சிறு சிறு செலவினங்கள் ஏற்படும். மேலும் வீட்டில் உள்ள எலெக்ட்ரானிக்ஸ் சார்ந்த பொருட்களில் பழுது வேலைகள் ஏற்படும்.
மாணவர்களைப் பொறுத்தவரை புதன் பகவானின் ஆசியால் நிறைந்த கல்வியினைப் பெறுவார்கள். மாணவர்கள் எளிதில் எதையும் கற்றுக் கொள்வர். கல்வியின் மீது மிகவும் நாட்டத்துடன் காணப்படுவர்.
ராகு- கேது பகவான் இருவரும் மிதுன ராசிக்கு யோக பலனையே கொடுப்பர். வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வேலையானது கிடைக்கப் பெறும்.
சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!
எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கப் பெறும். தொழில் ரீதியாக அபிவிருத்தி சார்ந்த விஷயங்களைச் செய்வீர்கள். தொழில்ரீதியாக வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். லாபம் அதிகரிக்கும். ராகு பகவான் உங்களுக்குப் பல விஷயங்களை அள்ளிக் கொடுப்பார்.
கார்த்திகை 13 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் சுக்கிர பகவான் நீச்சம் அடைந்துள்ளார்; 14 ஆம் தேதிக்குப் பின் சுக்கிரன் ஆட்சி பலம் பெறுகிறார்.