பிலிம் ரோல்களில் தனது பயணத்தை ஆரம்பித்த சினிமா உலகிம் இன்று தொழில்நுட்பங்களில் பல்வேறு பரிணாமங்களில் உயர்ந்து முழுவதும் டிஜிட்டலாக மாறிவிட்டது. திரையரங்குகளில் மட்டுமே சென்று புதிய படங்களைப் பார்த்து வந்த நமக்கு டிவிடி, சிடிக்களின் வருகை 15 வருடங்களாக சினிமா உலகை ஆண்டது. அதன்பின் சினிமா ரசிகர்கள் வீட்டிலிருந்தே படங்களைக் கண்டுகளிக்க, அதிலும் புரட்சியை ஏற்படுத்தி வந்த தொழில்நுட்பம்தான் ஓடிடி தளங்கள்.
சினிமா சென்று படங்களைப் பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஓடிடி தளங்கள் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது. குடும்பத்துடன் திரையரங்கம் சென்றால் குறைந்தது 1000 ரூபாய் காலியாவது உறுதி. ஆனால் குறைந்த செலவில் தரமான படங்களை அதுவும் எத்தனை முறை வேண்டுமானாலும் HD, 4K தொழில்நுட்பங்களில் வீட்டிலிருந்தே பார்க்கலாம் என்ற வசதியைக் கொண்டுவந்தன ஓடிடி தளங்கள்.
இவற்றின் வருகைக்குப் பிறகு சினிமா தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. அந்த வகையில் ஓடிடி தளங்கள் சினிமா உலகில் புரட்சியை ஏற்படுத்த அதிலும் தனது சாதனையை நிரூபித்திருக்கிறது ஜவான் திரைப்படம்.
இயக்குநர் அட்லீ உருவாக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி, பிரியாமணி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த இப்படம் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் 1000 கோடியைக் கடந்து வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சப்தமில்லாமல் ஒரு சாதனையையும் ஜவான் நிகழ்த்தியது.
ஓவர்சீஸில் ஜெயிலரை ஓடவிட்ட லியோ!.. அடேங்கப்பா இத்தனை கோடி வசூல் செஞ்சிருக்கா!..
அது என்னவென்றால் இதுவரை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட திரைப்படங்களில் அதிக பார்வையாளர்களையும், அதிக மணிநேரம் பார்த்த திரைப்படங்கள் பட்டியலில் முதலாவதாக இணைந்துள்ளது. ஓடிடி தளத்தில் 1 கோடியே 40 இலட்சம் மணி நேரங்கள் பார்வையிடப்பட்டு இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறது ஜவான்.
அமெரிக்காவைச் சேர்ந்த நெட்பிளிக்ஸ்-ன் ஓடிடி தளத்தில் இதுவரை 150 மில்லியனுக்கும் அதிமான சந்தாதாரர்கள் உள்ளனர். அதில் அமெரிக்காவில் மட்டும் 60 மில்லியனைத் தாண்டுமாம். இதே போல் டிஸ்னி ஹாட் ஸ்டார், அமேசான்பிரைம், சோனி, ஜீ 5, ஜியோ சினிமா, சன் நெக்ஸ்ட், ஈரோஸ் நவ், வூட் போன்ற ஓடிடி தளங்களும் முன்னணியில் உள்ளன.
சமீப காலங்களாக அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு இது போன்ற ஓடிடி தளங்களுக்கு விற்று விடுவதால் தயாரிப்பாளர்களுக்கு கையைச் சுடாமல் ஓரளவிற்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கின்றன ஓடிடிதளங்கள். மேலும் பெரிய ஹீரோ படங்கள் 15 நாட்களுக்குப் பின் ஓடிடி தளத்திலும் வெளியாகி சக்கைப் போடு போடுகின்றன.