ஓவர்சீஸில் ஜெயிலரை ஓடவிட்ட லியோ!.. அடேங்கப்பா இத்தனை கோடி வசூல் செஞ்சிருக்கா!..

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வசூல் சாதனையை லியோ திரைப்படம் உள்ளூர் முதல் ஓவர்சீஸ் வரை முறியடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

48 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராகவும் உச்ச நட்சத்திரமாகவும் சூப்பர்ஸ்டார் வலம் வருகிறார். 72 வயதிலும் இளம் நடிகர்களுக்கு செம டஃப் கொடுத்து வரும் ரஜினிகாந்த் ஓய்வில்லாமல் ஜெயிலர் முடித்த கையுடன் லால் சலாம், தலைவர் 170, தலைவர் 171 படங்களை நடிக்க உள்ளார்.

ரஜினி – விஜய் மோதல்

ரஜினி – கமல் சகாப்தம் முடிந்து விட்டது என்றும் விஜய் – அஜித் தான் இப்போதைய போட்டி என்கிற நிலை இருந்து வந்த நிலையில், இப்போதும் நான் தான் இங்க கிங் என ஜெயிலர் படத்தின் மூலம் மீண்டும் 525 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி மிகப்பெரிய சாதனையை ரஜினிகாந்த் படைத்திருந்தார்.

கடந்த ஆண்டு கமல்ஹாசனும் 400 கோடி வசூலை விக்ரம் படத்தின் மூலம் கொடுத்திருந்தார். இந்த ஆண்டு வெளியான அஜித்தின் துணிவு படம் 200 கோடிக்கும் குறைவான வசூல் ஈட்டிய நிலையில், வாரிசு 300 கோடி வசூலை ஈட்டியது.

விஜய் – அஜித் போட்டியெல்லாம் ஓரங்கட்டப்பட்டு கடந்த சில மாதங்களாக விஜய் – ரஜினி போட்டி பாக்ஸ் ஆபிஸில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் மிகப்பெரிய பஞ்சாயத்தை கூட்டின.

காக்கா – கழுகு சண்டை

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் காக்கா – கழுகு கதை சொல்லிட்டு நான் யாரையும் குறிப்பிடல என சொன்னதும் விஜய்யை தான் குறிப்பிட்டார் என பஞ்சாயத்து கிளம்பியது.

அதே போல லியோ வெற்றி விழாவில் காக்கா – கழுகு என சொல்லி விட்டு விஜய் கேப் விட்டு சுற்றி வந்து சிரித்தது ரஜினி ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. இப்படி இருவரும் சண்டைப் போட்டே வசூலை வாரி குவித்து வருகின்றனர்.

லியோ படத்துக்கு போட்டியாக ஏகே 62 இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தளபதி 68 படத்துடன் தான் விடாமுயற்சி மோதும் என தெரிகிறது.

F aT2J6akAA0f0p

ஓவர்சீஸில் முந்திய விஜய்

இந்நிலையில், வெளிநாடுகளில் ஜெயிலர் திரைப்படம் 26 நாட்களில் ஒட்டுமொத்தமாக 192.2 கோடி வசூல் செய்த நிலையில், விஜய்யின் லியோ அதிரடியாக 201 கோடி வசூலை ஈட்டி ஜெயிலர் படத்தின் ஓவர்சீஸ் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

இந்த ஆண்டு மட்டும் விஜய்யின் வாரிசு மற்றும் லியோ படம் இணைந்து 800 கோடி வசூலை சினிமா துறைக்கு அள்ளித் தந்துள்ளது. ரஜினிகாந்தின் ஜெயிலர் 600 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ் சினிமாவுக்கு அருமையான வருஷமாகவே 2023 அமைந்துள்ளது. அடுத்த ஆண்டு மேலும், அதிக வசூலை தமிழ் சினிமா ஈட்டும் என தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.