தீபாவளிக்கு ரிலீஸாக உள்ள படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. நாளைய இயக்குனரில் அடையாளம் காணப்பட்ட கார்த்திக் சுப்புராஜ். பீட்சா, ஜிகிர்தண்டா, பேட்ட போன்ற படங்களால் புகழின் உச்சியை அடைந்தார். தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் இவரது வளர்ச்சி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. 2014ல் வெளியான ‘ஜிகிர்தண்டா’வில் சித்தார்த், பாபி சிம்ஹா நடித்து அதகளப்படுத்தி இருப்பார்கள்.
சந்தோஷ் நாராயணின் இசையை வெகுவாக மக்களுக்கு அறிமுகப்படுத்தியதும் இந்தப்படம்தான். படம் வெளியான சமயத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. கார்த்திக் சுப்புராஜூக்கென ரசிகர் பட்டாளம் அதிகரித்தனர். ‘ஜிகிர்தாண்டா’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக வேண்டுமென்று ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து வந்தனர். அது இப்போதுதான் நிறைவேற உள்ளது. தற்போது வெளியாக உள்ள ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ 1975 காலகட்டத்தில் நடக்கும் கதையாகும்.
முதல் பாகம் போல இதிலும் டைரக்டர் ஒருவர் வில்லனை இயக்குவது போலவே கதை நகர்வதாக தெரிகிறது. அந்த படம் போலவே இதுவும் மக்களிடம் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் முக்கிய கேரக்டர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவருமே நல்ல நடிகர்கள்தான். சமீபத்தில் வெளியான டான், மாநாடு, மார்க் ஆண்டனி ஆகிய படங்கள் எஸ்.ஜே.சூர்யாவிற்கு நல்ல நடிகன் என்ற பட்டத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.
அதை தக்க வைக்க அவர் அரும்பாடுபட்டு வருவது ஒவ்வொரு படத்திலும் தெரிகிறது. நடிகனாக வேண்டுமென்று விரும்பி சினிமாவுக்குள் வந்த எஸ்.ஜே.சூர்யா காலப்போக்கில் இயக்குனரானார். பின் தன்னுடைய படங்களில் தானே ஹீரோவாக நடித்து வந்தார். ஒரு சில படங்கள் வெற்றி பெற்றது. பின் படங்கள் இயக்குவதை விட்டு விட்ட எஸ்.ஜே.சூர்யா முழுநேர நடிகனாகி விட்டார். அமிதாப் பச்சனை வைத்து ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தை இயக்க தொடங்கினார். இருப்பினும் சில காரணங்களால் தடைபட்டு போனது.
எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால், தான் இயக்க முற்பட்டுள்ள ‘கில்லர்’ படத்திற்கு அவருடைய கால்ஷீட்டை அவராலேயே கொடுக்க முடியாத அளவிற்கு பிசியாக உள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படங்களே தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது இல்லை. முதல் முறையாக அவர் நடித்திருக்கும் ‘ஜிகிர்தாண்டா டபுள் எக்ஸ்’ தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதால் மகிழ்ச்சியில் உள்ளார் எஸ்.ஜே.சூர்யா. அது தனக்கு இயக்கிய படங்களுக்கு கூட கிடைக்காத லக் என கொண்டாடி வருகிறார்.