பிரபல திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் தனது திரையுலக அனுபவங்களையும், நடிகர்களுடனான நட்பு குறித்தும் இவ்வாறு பேசியுள்ளார்.
ரஜினி, விஜய், ஆர்யா, முரளி, சரத்குமார் என் கூட டச்ல இருந்தாரு. விஜயகாந்த் அவரோட முதல் படம் வல்லரசு. படம் ரிலீஸ் பண்ணுனேன். சூப்பர்ஹிட். அடுத்த படத்துக்கு சுதீஷ் போன் பண்ணினாரு. எங்களுக்கு இன்ட்ரஸ்ட் குறைக்கணும்னாரு. நான் ஆக்சுவலாவே 2 ரூபா இன்ட்ரஸ்ட் தான் கொடுத்துக்கிட்டு இருக்குறேன்.
இதுக்குக் குறைஞ்சு எங்களால கொடுக்க முடியாது. இல்ல பாம்பேல எங்களுக்குக் கொடுத்துக்கிட்டு இருக்காங்க. சரி அங்கயே பண்ணிக்கோங்கன்னு சொன்னேன். படம் சுமாரா போச்சு. மூணாவது எங்கள் அண்ணா. சுதீஷ் போன் பண்ணாரு. இல்ல கேப்டன் சொல்லிட்டாரு. சுப்பிரமணியத்துக்கிட்ட தான் நீ வாங்கணும்.
வேற யாருக்கிட்டயும் வாங்கக்கூடாது. அவரு தான் ராசி. ஆனா ரொம்ப நாணயமா கேப்டன் வந்து முதல் படத்துல இருந்து கடைசி படம் வரைக்கும் பர்பெக்ட்டா எல்லா பேமெண்டையும் கரெக்டா கொடுத்துருவாங்க. உண்மையிலேயே மனிதாபிமானமிக்க ஒரு நடிகர்.
கார்த்திக், கவுண்டமணின்னு அந்த சமகால நடிகர்கள் எல்லாரும் எங்க பார்த்தாலும் நம்மகிட்ட ஒரு அன்னியோன்யமா இருப்பாங்க. அஜீத்துக்கும் எனக்கும் நேரடியா பழக்கமில்ல.
ஆனா ஒரு சின்ன பிரச்சனைல வந்து நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திக்கும், அஜீத்துக்கும் சங்கடங்கள் வரும்போது கடைசியா ஒரு படம் அவருக்குப் பண்ணிக் கொடுங்கன்னு கேட்கும்போது அவருக்கு நான் ஒரு படம் பண்ணித் தந்துடுறேன்னு செட்டில்மெண்ட் நான் பேசின போது எனக்கு அவரு அவ்வளவு நல்ல ரெஸ்பெக்ட் கொடுத்தாரு.
நேரடியா அஜீத்துக்கிட்ட பெரிய பழக்கம்லாம் கிடையாது. ஆனா அவரு அந்தளவுக்கு நல்ல ரெஸ்பெக்ட் கொடுத்தாரு. கமல் சாருக்கு விஸ்வரூபத்துல இருந்து பயங்கர பிரச்சனை. அந்த சமயத்துல அவரு படம் அவரு எடுக்குறாரு…ன்ன போது அவருகூட நின்னேன்.
அப்போ விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் அத்தனை பேரும் எனக்கு எதிரா திரும்பிட்டாங்க… எப்படி இவரு கமல் கூட போயி நிக்கலாம்னு. அதுக்கு அப்புறம் எல்லாரு கூடயும் நல்ல நட்பா தான் பழகுனேன்.
ரஜினிகாந்த் தன்னோட வியாபார முறையை மாத்துனதுன்னா அண்ணாமலையைத் தான் சொல்வேன். அதுவரைக்கும் சம்பளமா வாங்கிக்கிட்டு இருந்தவரு என்எஸ்சி ஏரியாவ வாங்க ஆரம்பிச்சாரு. அப்ப விநியோகஸ்தர் பக்கம் இருந்து பெரிய எதிர்ப்பு வந்தது. இவரு அநியாயம் பண்றாரு… சம்பளம் வாங்குறாரு… எப்படி என்எஸ்சி ஏரியா வாங்கலாம்? அதான் பெரிய ஏரியான்னாங்க.
அப்ப நான் ரஜினிகாந்துக்கு ஆதரவா குரல் கொடுத்தேன். அவரு செய்றது நியாயம்தான். படம் ஓடுச்சுன்னா அவருக்கு பெரிய சம்பளம் கிடைக்கப் போகுது. ஓடலைன்னா குறையா கிடைக்கப்போகுது. இது நல்ல முறை. விடுங்கன்னேன். யாரும் கேட்கவே இல்லை. அப்படி விட்டுருந்தாங்கன்னா இன்னைக்கு என்எஸ்சி சம்பளத்தோட ஹீரோவுக்கு இருந்துருக்கும். சினிமா நல்லாருந்துருக்கும்.