படத்தில் கூட மகன் புகைப்பிடிப்பதை கண்டிக்கல.. பேச வந்துட்டாரு.. விஜய்க்கு பதிலடி கொடுத்த ராஜேஸ்வரி பிரியா!

By Sarath

Published:

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான லியோ மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. லியோவில் அனிருத் இசையமைத்த ‘நா ரெடி’ பாடலானது விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியானது. இப்பாடல் வெளியான நாள் முதலே சிறந்த வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல் பல விமர்சனங்களையும் சந்தித்து வந்தது.

அந்த பாடலில் இளைஞர்களை சிகரெட் மற்றும் மது பழக்கத்திற்கு அடிமையாக்கும் வரிகள் மற்றும் காட்சிகள் உள்ளதாக மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா டி.ஜி.பி அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்திருந்தார்.

விஜய்க்கு ராஜேஸ்வரி பிரியா கண்டனம்

எதை ஒழிக்க வேண்டுமோ அதன் பெயரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உச்சரிக்க வைப்பது உகந்தது அல்ல. திரைப்படத் துறையினர் மக்கள் நலன் குறித்து சிந்தித்து ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும். நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்கள் நான் சொல்ல வரும் கருத்தினை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். கலைத்துறையை நேசிப்பவள் நான் ஆனால் சமூகம் போதைக்கு அடிமையாக மாறி வரும் நிலையில் இதனை தவிர்க்கலாம் என்று அந்த அறிக்கையில் ராஜேஸ்வரி பிரியா சொல்லியிருந்தார்.

இந்நிலையில் மில்லி உள்ள போன கில்லி வெளியே வருவான் உள்ளிட்ட வரிகளை தவிர்த்து விட்டு டவ் டவ் என்று மாற்றி பாடலை முடித்து படத்தில் இணத்திருந்தனர். இதை தொடர்ந்து விஜய் நேற்று வெற்றி விழாவில் பேசியதற்கு மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சினிமாவை சினிமாவா பார்க்கணுமா?

சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்று பதில் கூறி இருக்கும் நடிகர் விஜய் அவர்கள் தன்னை ஒரு சினிமா நடிகனாக மட்டுமன்றி தளபதியாகவும் பார்க்க சொல்கிறார் என்றும் தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் இருப்பதாகவும் மாணவர்கள் குடிப்பதில்லை என்றும் பேசுவது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என்றும் விளாசி இருந்தார்.

நெகட்டிவ் கேரக்டரில் மட்டும் நீங்கள் புகை மதுவை பயன்படுத்தவில்லை என்றும் லியோ படத்தில் பள்ளிக்கு செல்லும் தன் மகன் மேத்யூ தாமஸ் சிகரெட் குடிப்பதை நேரடியாக அப்பாவிடம் சொல்லும்போது கூட சிகரெட்டின் கெடுதல் பற்றி பேசாத நெகட்டிவ் அப்பாவாகவும் நடித்துவிட்டு காரணம் சொல்லி மழுப்பி பேசாதீர்கள் என லியோ படத்தை முழுமையாக பார்த்து விட்டு வச்சு செய்துள்ளார்.

நான் தளபதி மக்கள் ஆணையிட்டால் செய்வேன் என சொன்னீர்கள்.. நானும் மக்களில் ஒருவர்தான் இனி மது,புகை காட்சிகளில் நடிக்கமாட்டேன் என நீங்கள் அறிக்கை கொடுங்கள். நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டிய இடத்தில் இருக்கும் எங்களை போன்றோரால் உங்களது 2 ரவுண்டு பேச்சினை ரசிக்க முடியவில்லை என வரிக்கு வரி விஜய்யை வெளுத்து வாங்கி உள்ளார்.

மாணவர்கள் மத்தியில் மது, கஞ்சா, புகை மற்றும் பல போதை பொருள்கள் புழக்கத்தினை கண்ணெதிரே காண்பிக்கத் தயாராக உள்ளேன் வேண்டுமென்றால் வந்து பாருங்க என நடிகர் விஜய்யையும் டேக் செய்துள்ளார்.