நடிகர் எம்ஜிஆர் இடம் அதிக முத்தம் பெற்ற ஒரே ஹீரோ யாரு தெரியுமா?

By Velmurugan

Published:

வில்லனாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து பின்பு ஹீரோவாக மாறிய முக்கிய நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவரின் நடிப்பில் பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அந்த அளவிற்கு மிக சுவாரசியமான வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

சத்யராஜ் அவர்கள் தான் கலந்து கொள்ளும் அனைத்து கூட்டங்களிலும் புரட்சித் தலைவரின் வெறியன் என உரக்கச் சொல்லும் எம்ஜிஆரின் தீவிர பக்தர். இவர் தனது இளம் வயதிலேயே தலைவர் எம்ஜிஆரின் பக்தர் ஆனவர். அவர் சினிமாவில் நடிகரானதும் புரட்சித்தலைவர் இல்லம் சென்று புரட்சித்தலைவர், ஜானகி அம்மையார் இருவருடன் கலந்துரையாடி ஆசிர்வாதம் பெற்ற பாக்கியம் பெற்றவர்.

சத்யராஜ் நடித்த பல படங்கள் வெற்றி படங்கள், தலைமுறை நடிகர் என்று பெருமை கொண்டவர். சமீபத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்ற பாகுபலி படத்தில் படம் முழுக்க இவரது பாத்திரம் எல்லோராலும் பேசப்பட்டது. புரட்சித்தலைவர் தன்னுடைய இராமநாதபுரம் இல்லத்திற்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று சொன்ன வேத வார்த்தையை உலக சுற்றி பார்க்க கிடைத்த விசா என்கிறார் புரட்சித் தமிழன் சத்யராஜ்.

கோவையில் நடந்த சத்யராஜின் சகோதரி திருமணத்திற்கு புரட்சித்தலைவர், ஜானகி அம்மையார் இணைந்து வந்து கலந்து கொண்டது அவர் வாழ்வில் மறக்க முடியாத பசுமையான தருணமாக கூறியுள்ளார். வேதம் புதிது படத்தை பார்த்து எம்ஜிஆர் சத்யராஜுக்கு 10 முத்தம் கொடுத்ததாக சத்யராஜ் பல மேடைகளில் கூறியுள்ளார். அது மிகவும் உற்சாக இருந்ததாகவும், அடுத்து ஜல்லிக்கட்டு நூறாவது நாள் விழாவில் சத்யராஜுக்கு எம்ஜிஆர் முத்தம் கொடுத்துள்ளார்.

SATHI

சென்னையில் ஆல்பட் திரையரங்கில் நடந்த ஆயிரத்தில் ஒருவன் மறு வெளியீடு வெள்ளி விழாவில் புரட்சித் தமிழன் சத்யராஜ் பேசிய பேச்சு அவர் புரட்சித் தமிழனாகவே மாறிவிட்டார் என்று சொல்லலாம். எங்களுக்கு எம்ஜிஆர் அவர்கள் தான் எல்லாம். நாங்கள் அப்படி வளர்ந்து விட்டோம். மக்கள் திலகம் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வசனம் பேசியது போல இயல்பாக வீரனாக எந்த ஹீரோவாலும் யாரும் பேச முடியுமா.. பெற்றால் தான் பிள்ளையா படத்தில் குழந்தை இடம் பேசும் காட்சி வேறு எந்த நடிகராலும் பேச முடியுமா.. என்று சவால் விடும் அளவிற்கு சத்யராஜ் அந்த மேடையில் பேசியுள்ளார்.

மீண்டும் இயக்குனர் நெல்சன் உடன் இணையும் தளபதி விஜய்.. ரகசிய அப்டேட் இதோ!

அது மட்டும் அல்லாமல் எம்ஜிஆரின் அனைத்து விழாக்களிலும் கலந்து கொண்டு அவருடைய புகழை பாடுவர் சத்தியராஜ். இவர் மலேசியாவில் தைமியம் என்ற இடத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச் சிலையை திறந்து வைத்து எம்ஜிஆர் உடைய புகழையும் பெருமையும் பெருமிதமாக பேசியவர் தான் புரட்சித் தமிழன் சத்தியராஜ். திரையுலகில் நான் யாரையாவது ரோல் மாடலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் அது எனது மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை மட்டும் தான் எடுத்துக் கொள்வேன்.

அதுமட்டுமல்லாமல் நான் நடிக்கும் எந்த ஒரு திரைப்படத்திலும் ஒரு முறையாவது அவருடைய சாயலில் வசனம் பேச வேண்டும் என்று ஆசைப்படுவேன். என்னுடைய எத்தனையோ திரைப்படங்களில் அதை நான் நிறைவேற்றியும் இருக்கிறேன். எனக்கு ஏதாவது விசேஷ நாட்கள் வந்தால் கண்டிப்பாக நான் ராமாபுரம் தோட்டத்திற்கு கண்டிப்பாக செல்வேன். புரட்சித்தலைவர் அவர்களிடமும் ஜானகி அம்மையார் அவர்களிடமும் நான் ஆட்சி பெற்று தான் வருவேன்.

அங்கு சென்றாலே போதும் எனக்கு ஏதோ ஒரு பெரிய கோயில்களுக்குள் சென்ற திருப்தி இருக்கும். அந்த அளவுக்கு மனம் அமைதியும் நிம்மதியும் சாந்தியும் கிடைக்கும் என நடிகர் சத்தியராஜ் எம்ஜிஆர் மீது கொண்ட பக்தியை பல முறை வெளிக் காட்டியுள்ளார்.