மீண்டும் இயக்குனர் நெல்சன் உடன் இணையும் தளபதி விஜய்.. ரகசிய அப்டேட் இதோ!

தளபதி விஜய் நடிப்பில் ஆகஸ்ட் 19ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் லியோ. இயக்குனர் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக இணைந்து தளபதி விஜய் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியான ஒரு வாரத்திலேயே 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. மேலும் இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நவம்பர் 1 ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தயாரிப்பு தரப்பில் இருந்து அப்டேட்கள் வெளியாகி இருந்தது.

இந்த வெற்றி கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தளபதி 68 வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் பூஜை வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தில் பல முன்னணி பிரம்மாண்ட நடிகர்கள் இணைந்து களமிறங்க உள்ளனர். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதால் பாடல்கள் ஒவ்வொன்றும் தெறிக்கவிடும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் அடுத்தடுத்த படம் குறித்த ஒரு சுவாரசியமான அப்டேட் கிடைத்துள்ளது. விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு பீஸ்ட் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக வெளியாகி வசூலில் சாதனை படைத்தாலும் விமர்சன ரீதியாக சில எதிர்மறையான கருத்துக்களையும் இந்த திரைப்படம் பெற்றிருந்தது.

இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பீஸ்ட் திரைப்படம் வெளியான பின் படக்குழுவினருக்கு விஜய்யின் வீட்டில் ஒரு விருந்து வழங்கப்பட்டது. அந்த விருந்தின் போது தளபதி விஜய் அவர்கள் இந்த விருந்து பீஸ்ட் படத்தின் வெற்றி விழா அல்ல மாறாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க இருப்பதற்கான முன்னறிவிப்பு கூட்டம் என்று கூறியதாக தகவல் கிடைத்துள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் சம்பவம் செய்ய காத்திருக்கும் தளபதி விஜய்!

மேலும் நெல்சன் அந்த நேரத்தில் அடுத்ததாக ஜெயிலர் படம் இயக்க இருந்த நிலையில் அந்தப் படத்திற்கு கேமராமேன் அவர்களை மாற்றிக் கொள்ளும் படியும் பீஸ்ட் படத்திற்கு கேமரா மேனாக இருந்த மனோஜ் பரமஹம்சன் அவர்களை தளபதி விஜய் நடித்த லியோ படத்திற்கு புக் செய்ததாகவும் தகவல் கிடைத்தது. அந்த வகையில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திகேயன் அவர்கள் கேமரா மேன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு கருத்துக்களையும் தளபதி விஜய் அவர்கள் அன்றே உறுதி செய்துள்ளார்.

அந்த வகையில் நெல்சன் மற்றும் தளபதி விஜய் இணையும் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தக் கூட்டணி தளபதி 68 படத்திற்கு பின் இணைய வாய்ப்புள்ளதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேலும் இரண்டாவது முறையாக இணையும் இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews