இது 100 சதவீதம் லோகேஷ் படமில்லையா?.. விஜய் தலையிட்டதாக வாக்குமூலம் அளித்த தயாரிப்பாளர்!

By Sarath

Published:

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் முதல் நாள் பார்க்க டிக்கெட்டே கிடைக்காத நிலை நிலவி வந்த நிலையில், இரண்டாம் நாளில் பல திரையரங்குகளில் வெறும் 60 சதவீதம் தான் ரசிகர்கள் வந்திருந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெரும் பாதிப்பை 2வது நாளில் லியோ சந்தித்த நிலையில் தான் வசூல் விவரத்தை முதல் நாள் அறிவித்ததை போல தயாரிப்பு தரப்பால் 2வது நாளில் வெளியிட முடியவில்லை என்கின்றனர்.

இரண்டாம் வசூல் எங்கே?

லியோ படம் சுமார் ரகம் என ரசிகர்கள் சொல்லி விட்ட நிலையில், அதற்கு முட்டுக் கொடுக்க லியோவுக்கு முன் கதை இருக்கு, பின் கதை இருக்கு, சைடு கதை இருக்கு என ரத்னகுமார் உள்ளிட்டோரே கதை விட்டு வருகின்றனர்.

விக்ரமும் லியோவும் ஒன்று தான், ஹைனாவும் ஏஜென்ட் டீனாவும் ஒன்று, பார்த்திபனும் கர்ணனும் ஒன்று என புதிய கதைகளை கட்டி லியோ 2 வந்தால் தான் லியோ ஒன்று படமே புரியும் அளவுக்கு ஏகப்பட்ட ரகசியங்களை லோகேஷ் கனகராஜ் அவருக்கே தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறார் என உருட்டி வருகின்றனர்.

ஏகப்பட்டு உருட்டு:

லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை தான் தன்னை முழுமையாக எடுக்க விடவில்லை என்றும் லியோ 100 சதவீதம் என்னுடைய படம் தான் என கடைசி வரை சத்தியம் செய்யாத குறையாக சொல்லி வந்த நிலையில், தயாரிப்பாளர் லலித் குமார் அளித்த பேட்டியில், தம்பி ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தை தூக்கிட்டு வந்துச்சு, அந்த சிடியை பார்த்து விஜய் அண்ணாவே தூங்கி விட்டார். ஏகப்பட்டு ஃபைட் பிட்டுகளை கதையில் சேர்த்து கொண்டு வா என நானும் தளபதியும் தான் பல முறை கதையில் கரெக்‌ஷன் செய்து அனுப்பினோம் என போட்டு உடைத்துள்ளார்.

கதையில் தலையீடு:

லியோ முதல் பாதி அருமையாகவும் இரண்டாம் பாதி தலை கால் புரியாமல் இருந்த போதே ரசிகர்களுக்கு வந்த டவுட்டை தற்போது தயாரிப்பாளர் தாங்க முடியாத வேதனை காரணமாக சொல்லி உள்ளார் என ரஜினிகாந்த் மற்றும் அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து கிண்டல் செய்து வருகின்றனர்.

நடிகர் விஜய்யால் இதுவரை எல்சியூவுக்கு இருந்த மானமும் மரியாதையும் போயிடுச்சு என்றும் அடுத்த படத்தில் லோகேஷ் கனகராஜ் எல்லா சுதந்திரத்துடனும் படத்தை பண்ணி மிகப்பெரிய ஹிட் கொடுப்பார் என்றும் கூறி வருகின்றனர்.