அஜித் படம் எடுத்து காணாமல் போன இயக்குனர்கள் யார் யார் தெரியுமா..?

சரவண சுப்பையா : 2001 ஆம் ஆண்டு சரவண சுப்பையா தன்னுடைய முதல் படமான தல அஜித் நடிப்பில் ”சிட்டிசன்” என்ற படத்தை உருவாக்கும் வாய்ப்பை பெற்றார். மேலும் அஜித் அந்த படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படத்தில் வரும் ”நான் தனி ஆளு இல்லை” என்ற வசனம் மிகவும் புகழ்பெற்றது. இப்படத்தில் அஜித் பலவித கெட்டப்பில் வந்து கமல்ஹாசனை அடுத்து எல்லா

கெட்டப்களிலும் பொருந்திய நடிகர் என்ற புகழை பெற்று இருப்பார். தன் முதல் படத்திலேயே பல திறமைகளை வெளிப்படுத்திய சரவண சுப்பையா தனி முத்திரையை பதிப்பார். அதன் பின்னர் பல படங்களில் நடித்தார். தொலைக்காட்சிகளில் சினிமா விமர்சகராவும் பணியாற்றி வந்தார். ஏனோ தமிழ் சினிமாவில் அவருக்கு காலம் கை கொடுக்கவில்லை. தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க தவறிய இயக்குனரில் இவரும் ஒருவர்.

தருண் கோபி : 2006 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளிவந்த திமிரு என்ற படத்தை இயக்கிய தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி வைத்தவர். அப்படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படும். மேலும் நகைச்சுவையில் வடிவேலு பின்னியிருப்பார். விஷாலின் பிரபலமான டயலாக் ஆன ”நானும் மதுரைக்காரன் தான்டா” என்று பஸ் நிலையத்தில் பேசும் வசனம் மிகவும் பிரபலமானது.

விஷாலுக்கும் மிகப்பெரிய வரவேற்பு பெற்று தந்த படம். அதன் பின் 2008 ஆம் ஆண்டு சிம்பு நடித்த ”காளை” என்ற திரைப்படத்தை இயக்கினார். அப்படம் படுதோல்வி அடைந்தது அதன் பின் தருண் கோபி மாயாண்டி குடும்பத்தார் போன்ற பல படங்களில் நடித்து முழு நேர நடிகராக கவனம் செலுத்தி வருகிறார்.

வல்லரசு மகாராஜன் : 2000 ஆண்டில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான “வல்லரசு” என்ற வித்தியாசமான திரைப்படத்தைக் கொண்டு தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். வல்லரசு மகாராஜன் மற்றும் விஜயகாந்த் திரையுலக பயணத்தில் மிக முக்கியமான படம் என்று கூறினால் அது மிகையாகாது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஜன் அடுத்த அஜித்தை வைத்து ”ஆஞ்சநேயா” என்ற படத்தை இயற்றினார். அதனை தொடர்ந்து ஆக்ஷன் கிங் அர்ஜுனன் வைத்து எடுத்த ”அரசாட்சி” என்ற படமும் தொடர் தோல்வியை தழுவியதால் அத்துடன் அவருடைய திரை உலக பயணம் தடைப்பட்டு விட்டது.

சிங்கம் புலி : காமெடி நடிகராக அறிமுகமாகி குணச்சித்திரம் நடிகராக கலக்கி வருபவர் சிங்கம் புலி. இவர் 2002 ஆம் ஆண்டு அஜித் வித்தியாசமான கெட்டப்பில் வெளிவந்த ”ரெட்” படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தின் பாடல்கள் தேவாவின் இசையில் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி இருக்கும். படத்தில் பாடல் ஒரே நேரத்தில் ஸ்டூடியோ மற்றும் வெளிப்புறத்தில் படமாக்கப்பட்டு வித்தியாசம் தெரியாதது போல் எடிட்டிங் செய்யப்பட்டிருக்கும்.

முதல் முறையாக பெரிய இடைவெளி பிறகு ரவுடி கேரக்டரில் மொட்டை போட்டுக்கொண்டு அஜித் நடித்தார். படம் படுதோல்வி அடைந்தது . அதன் பின் 2005 பாலா தயாரிப்பில் உருவான ”மாயவி” என்ற படத்தில் திரைக்கதை எழுதினார். அதன் பிறகு ”மாயாண்டி குடும்பத்தார்” என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தற்போது பிஸியாக எடுத்து வருகிறார் சிங்கம் புலி.

ராஜகுமாரன் : இவர் பிரபல நடிகை தேவயானியின் கணவர் என்பது தெரிந்ததே. இவர் பிரபல இயக்குனரும் கூட. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்பி சௌத்ரி தயாரிப்பில் அஜித் சிறப்பு தோற்றத்தில் நடித்து பார்த்திபனின் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த ”நீ வருவாய் என” படத்தை இயக்கியவர்ல். அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

அதன் பின் அடுத்தடுத்து இயக்கத்தில் இயக்கிய திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது. பின்னர் தன் கவனத்தை நடிப்பு பக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டார். இவர் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.