அழிக்கும் கடவுள் சிவனாலும், காக்கும் கடவுள் விஷ்ணுவாலும் அழிக்க முடியாத அரக்கர்களைக்கூட ஆதிசக்தியான பார்வதி தேவி அனைத்து சக்திகளின் ஒட்டுமொத்த உருவமாய் அவதாரம் எடுத்து ராட்சசர்களை அழித்து இந்த பிரபஞ்சத்தையும், தேவர்களையும் தீயசக்திகளில் இருந்து காத்த நன்னாளே நவராத்திரி பண்டிகையாக 9 நாள்களும் கொண்டாடப்படுகிறது.
நவராத்திரி உருவானதற்கு பின்னணியாக பார்வதி தேவி பல அரக்கர்களை அளித்ததாக புராண கதை சொல்லப்படுகிறது. ஒரு வருஷத்துல நாலு முறை நவராத்திரி வருகிறது.
காஷ்யப முனிவருக்கும் அவரது மனைவி தனுவிற்கும் பிறந்தவர்கள் தான் அசுர குலத்தைச் சேர்ந்த அரக்கர்கள். இவர்கள் கடும் தவம் புரிந்து பிரம்ம தேவரிடமும், சிவபெருமானிடமும் பல வரங்கள் பெற்றனர்.
அவர்கள் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், உலக மக்களுக்கும் தீராத தொல்லை கொடுத்து வந்தனர். அவர்களில் சொம்பனும் விசும்பனும் குறிப்பிடத்தக்கவர்கள். கிட்டத்தட்ட 10 ஆயிரம் வருடங்கள் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிந்தனர்.
யாராலேயும் தன்னை அழிக்க முடியாதபடி வரம் வேணும். அப்படியே அழிந்தாலும் அது ஒரு கன்னிப்பெண்ணின் கையால் தான் இருக்கணும்னு வரம் வாங்கிடறாங்க. அப்புறம் வரம் கிடைச்சாச்சு. மூவுலகத்தையும் ஆட்டிப் படைக்க ஆரம்பிச்சிடறாங்க.
இதைத் தாங்க முடியாத தேவர்கள் மும்மூர்த்திகளிடம் போய் முறையிடுறாங்க. அவங்க தங்களோட சக்தியைப் பயன்படுத்தி ஒரு புதிய சக்தியை உண்டாக்கினாங்க. மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிங்கி, சாமுண்டின்னு அனைத்துத் தேவதைகளின் ஒட்டுமொத்த வடிவமாகத் துர்க்கையாகிய மகாசக்தியைத் தோற்றுவிச்சாங்க.
அவங்களோட வாகனங்களையும், ஆயுதங்களையும் துர்கா தேவிக்கிட்ட கொடுத்துருக்காங்க. தேவி அழகிய ஒரு பெண்ணா உருவமெடுத்து பூலோகத்துக்கு வந்துட்டாங்க. சொம்பன், விசும்பனுக்கு ஜண்டாவும், முண்டாவும் படைத்தளபதிகள்.
ஜண்டாவும், முண்டாவும் அழகான தேவியைப் பார்த்ததும் எங்கள் ராஜாக்களுக்கு நீங்கள் பொருத்தமானவர்கள். அவர்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றனர். அப்போ பார்வதி தேவி என்னை போர்ல யார் ஜெயிக்கிறாங்களோ அவங்களைத் தான் திருமணம் செய்து கொள்வேன்னு சொல்லிருக்காங்க.
ஜண்டாவும் முண்டாவும் ராஜாக்கள் கிட்ட போய் சொல்லிருக்காங்க. அதைக் கேட்டதும் சொம்பன் அந்தப் பெண்ணை அடைஞ்சி மனைவியாக்கத் துடிக்கிறான். ஒவ்வொரு அரக்கர்களாக அனுப்புகிறான். எல்லோரையும் அழிக்கிறாங்க தேவி. கடைசியில் ரத்த பீஜன் என்ற அரக்கனை அனுப்புகிறான்.
அவன் உடலில் இருந்து சிந்திய ஒவ்வொரு ரத்தமும் ஒவ்வொரு அரக்கனாக மாறுகிறான். அவனையும் துர்க்கா தேவி அழித்து விடுகிறார். கடைசியில் சொம்பனையும், விசும்பனையும் பார்வதி தேவி அழித்து விடுகிறாள்.
ஜண்டாவையும், முண்டாவையும் அளித்த தேவியைத் தான் சாமுண்டீஸ்வரியாக வழிபட்டு வருகிறோம். 9 பேராக அவதரித்த தேவி இறுதியில் 9 நாள்களாகப் போரிட்டு வெற்றித்திருமகளாக வலம் வந்துருக்காங்க.
முதல் 3 நாள்கள் துர்கா பூஜை, அடுத்த 3 நாள்கள் லட்சுமி தேவிக்கு பூஜை, கடைசி 3 நாள்கள் சரஸ்வதி தேவிக்கு பூஜை செய்யப்படுகிறது.
முதல் பூஜையில் நமது கெட்ட எண்ணங்களை அழிக்கிறாங்க. 2வது பூஜையில் நமக்கு வேண்டிய செல்வங்களைத் தந்து நம்மை முழு மனிதனாக மாற்றுகிறாங்க. கடைசி 3 நாள் சரஸ்வதி தேவி ஞானசக்தியை அருளி நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுறாங்க.
கடைசி நாளான தசமி அன்று மோட்சத்தை அடைய வழி ஏற்பட்டதைக் கொண்டாடப்பட்ட விதமாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.