காதல் மன்னன்: மறக்கமுடியாத திலோத்தமா – 25 வருட கொண்டாட்டம்!

இயக்குனர் சரண் 1998ம் ஆண்டு இயக்குனராக அறிமுகமான படம் ‘காதல் மன்னன்’. இன்றும் கொண்டாடப்படும் இப்படம் அதில் பணிபுரிந்த பலருக்கும் முதல் படம். எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு நடிகராக முதல் படம்.

பரத்வாஜ்-க்கு இசையமைப்பாளராக முதல் படம். இந்தப்படத்தின் உயிரோட்டமான கதாபாத்திரம் ஹீரோயின் மானு, திலோத்தமாவாக எப்போதும் ஒரு சோகத்தை முகத்தில் கொண்டிருக்கும் அழுத்தமான கேரக்டரில் வருவார். அவருக்கும் இது முதல் படம். விவேக் இதற்கு முன் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் அவருடைய எதிர்காலத்தை வெளிச்சமாக்கியது.

‘காதல் மன்னன்’ ஹீரோயின் தொடர்ந்து படங்களில் நடிக்கவில்லை. ஆனால் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்தாலும், இந்த படம் அவருக்கு தந்த புகழ் என்றும் அழியாது. இயக்குனர் கே.பாலச்சந்தரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்தவர் சரண்.

அவருக்கு 1998ம் ஆண்டு முதல் படமான காதல் மன்னனை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய படத்திற்கு கதாநாயகன், மியூசிக் மற்றும் பிற விஷயங்களை முடிவு செய்து வைத்திருந்தவருக்கு, ஹீரோயின் கிடைப்பது பெரும் சிரமமாக இருந்துள்ளது.

காதல் மன்னனின் ஹீரோயின் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற சில வரைமுறைகளை சரண், விவேக்கிடம் கூறியுள்ளார். விவேக் ஒருமுறை ஒரு நடன நிகழ்ச்சிக்கு சென்ற போது அங்கு மானுவைப் பார்த்து பிடித்து போக உடனே சரணிடம் அறிமுகம் செய்துள்ளார்.

அஸ்ஸாமிலிருந்து புதிதாக சென்னைக்கு வந்திருந்த மானுவிற்கு சினிமாவில் நடிப்பதில் துளியும் விருப்பமில்லை. ஒவ்வொரு முறையும் மானு பங்கேற்கும் நட நிகழ்வுகள் அரங்கிற்கு வெளியே காத்திருந்த விவேக் தொடர்ந்து மானுவிடம் நடிக்குமாறு கேட்டு வந்ததன் விளைவாக ஆறு மாதங்களுக்கு பிறகு அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

நடிக்க ஆரம்பித்ததும் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. இருப்பினும் காதல் மன்னன் படத்தின் மொத்த யூனிட்-ம் மானுவிற்கு ஆதரவாக இருந்து இந்த படம் இப்படி ஒரு வெற்றியை பெருவதற்கு உறுதுணையாக இருந்துள்ளது. இந்த படத்தின் பாடல் மற்றும் காமெடி சீன்கள் குறிப்பாக எம்.எஸ்.வி வரும் சீன்கள் இன்று பார்த்தாலும் ரசிக்கும்படி இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews