நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் முருகன் என கந்த சஷ்டி கவசத்தில் ஒரு வரி வரும். நவகோள்களையும் கட்டுப்படுத்துபவன் அந்த முருகன். முருகன் சிவனின் அம்சமானவர்.
பழனியில் இருக்கும் முருகன் போகர் ஸ்வாமிகளால் செய்யப்பட்டது. கடுமையான பாஷாணங்கள் கலந்து செய்யப்பட்டதால் இந்த சிலை மிக பிரசித்தம்.
இந்த சிலையை பூமிகாரகன் செவ்வாயின் கதிர் வீச்சு எங்கு அதிகம் இருக்கிறதோ அங்கு பிரதிஷ்டை செய்ய வேண்டும் என போகர் எண்ணி செவ்வாயின் கதிர்வீச்சு அதிகம் இருக்கும் பழனியில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த முருகனை வணங்கினால் நவகோள்களின் தோஷத்தால் அவதிப்படுபவர் அனைவரின் தோஷத்தை நீக்குவதாக ஐதீகம். இது மட்டுமல்லாமல் செவ்வாயின் தலைமை இடம் போலவே இந்த பழனி கூறப்படுகிறது.
அகில உலகத்தையும் காக்கும் பூமிகாரகன், முருகனின் அருளால் இவரை வணங்குபவர்க்கு பூமி சம்பந்தமான பிரச்சினைகள் தீரும் எனவும், புதிதாக இடங்களை வாங்குவார்கள், வீடு கட்டுவார்கள் வாழ்வில் அனைத்து பிரச்சினைகளும் தீரும் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதே பக்தர்களின் நம்பிக்கை.
செவ்வாய் தோஷம் போன்ற கொடிய தோஷங்களால் அவதிப்படுபவர்களும் பழனி முருகனை வணங்கினால் அனைத்தும் தீரும் திருமணத்தடை, திருமண வாழ்வில் இன்னல்கள் நீங்கி நல்வாழ்வு காணலாம் என்பது நம்பிக்கை.
காரணம் செவ்வாய் கிரகத்தின் அதிபதியானவன் பழனி முருகன் என்பதும் ஒரு காரணம்.