பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் துவங்கி தற்போது இந்தியன் 2 வரை எந்த வித பந்தாவும் இல்லாமல் பொறுப்புடன் நடித்து வரும் ஒரே கலைஞன் சித்தார்த். இவர் சினிமாவில் மட்டுமல்ல யதார்த்தமான வாழ்க்கையிலும் கூட எந்த பந்தாவும் இல்லாதவர். அவரைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
எனக்கு அடிக்கடி துணி வாங்குறது புடிக்காது. வாட்ச் வாங்கறது புடிக்காது. எனக்கு ஜெனரலா என்னோட பழைய துணி ரொம்ப புடிக்கும். ஏன்னா அது என் துணி. சித்தார்த்தோட துணி. எல்லாரோட பர்சனாலிட்டியும் டிபரண்ட் தான். நான் அசிஸ்டண்ட் டைரக்டரா இருந்தப்ப போடுற துணியைத் தான் இப்பவும் போடுறேன். என் பிரண்டு கூட கேட்பாங்க. நீ துணியே வாங்காம இருடா. பரவாயில்ல. அது எப்படிடா 2011ல வாங்குன பேண்ட் இப்பவும் பிட் ஆகுது? என்னடா செய்றன்னு கிண்டலா கேட்பாங்க.
நாம சம்பந்தமே இல்லாம ஒரு விஷயம் பண்ணிக்கிட்டு இருக்குறப்ப… யாராவது வந்து என் படங்களைப் பத்திப் பேசுனா ரொம்ப டிஸ்டர்ப்பாயிடும்.
பீச்சுக்கு வர்றது எனக்கு ரொம்ப புடிக்கும். எந்த சத்தமும் இல்லாம இருக்குறது ரொம்ப பிடிக்கும். பீச்ல அங்க இருக்குற நாய்களோட விளையாடணும். நாய், பூனை எல்லாம் ரொம்ப ரொம்ப புடிக்கும்.
நடுரோட்டுல பார்த்தப்ப நான் தூக்கிட்டு வந்த நாய்க்குட்டி 19 வருஷமா என் கூட இருக்கு. என் பூனைக்கு 6 வயசாகுது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வயித்துல நெருப்பக் கட்டிக்கிட்டு இருக்குறது எங்களோட ஜாதகத்துலயே இருக்கு. படம் நாடகம் கிடையாது. ஒருவாட்டி வெளிய வந்துட்டுன்னா அவ்ளோ தான். அடுத்தவாட்டி சரி பண்ண முடியாது. நீங்க ஒரு விஷயத்தை ஏற்றமா பார்த்தா அதுதான் பிரச்சனை. நீங்க உங்க லெவல்லயே இருங்க. நான் அதைத் தான் மைண்ட்ல வச்சிக்குவேன். சில படங்கள்ல எக்ஸ்ட்ரா டென்சன் வரும். சில பொறுப்புகள் வரும்.
என் படம் தனியா தான் வரணும்கறதுல என்ன இருக்கு. எல்லா படமும் ஓடும். எல்லா படமும் ஓடுறதுக்கான ஸ்பேஸ் இருக்கு. அந்தப் படம் புடிச்சிருந்தா மக்கள் பார்ப்பாங்க. ஒரு படத்தோட தோல்வியால தான் இன்னொரு படத்தோட வெற்றி கிடைச்சதுன்னு சொல்றது தப்பு. நாங்க எங்க படத்தை ரிலீஸ் பண்றதுக்கு என்ன மெனக்கிடணுமோ அதைப் பண்ணுவோம்.
நீங்களும் பண்ணுங்க. ஆடியன்ஸ்சுக்குப் புடிச்சா எல்லாரையும் வரவேற்பான். இந்தப் பாலிடிக்ஸ், காம்பெடிஷன் இதெல்லாம் தேவையில்லாதது. சலார் என் பிரண்ட்ஸோட படம் தான். அது என்னிக்கி வருதோ அவங்க போட்ட காசு அவங்களுக்குப் போகணும்.