ஒரு திரைப்படத்தின் வெற்றியே அந்த படத்தின் சஸ்பென்ஸை கடைசிவரை யாராலும் கண்டுபிடிக்க முடியாத வகையில் திரைக்கதை எழுதுவது தான். அந்த வகையில் பல திரைப்படங்கள் தமிழில் வந்திருந்தாலும் அதே கண்கள் திரைப்படத்தில் வரிசையாக நடக்கும் கொலையை செய்தவர் யார்? என்பது கிளைமாக்ஸ் வரை பார்வையாளர்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியாத வகையில் இயக்குனர் ஏசி திரிலோகசந்தர் இயக்கி இருப்பார்.
ஏவிஎம் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் ரவிச்சந்திரன், காஞ்சனா நடிப்பில் ஏசி திரிலோகசந்தர் இயக்கத்தில் உருவான திரைப்படம் அதே கண்கள். இந்த படம் கடந்த 1967ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் அசோகன், ராமதாஸ், நாகேஷ் உள்பட பலர் நடித்து இருப்பார்கள்.
எம்ஜிஆர்- சிவாஜி, கமல்-ரஜினி.. இரு தலைமுறை நடிகர்களுக்கு வெற்றிப்படம் கொடுத்த இயக்குனர்..!
இந்த படத்தில் கதை என்னவெனில் ஒரு பிரம்மாண்டமான மாளிகையில் கூட்டு குடும்பமாக அசோகன், எஸ்வி ராமதாஸ், குடும்ப டாக்டர் பாலாஜி, வேலைக்கார ஏ.கருணாநிதி, அவுட் ஹவுஸில் ஒரு கிழவர் உள்பட சிலர் வாழ்ந்து வருவார்கள். அப்போது அந்த வீட்டில் வரிசையாக தொடர் கொலைகள் நடக்கும். இது குறித்து காவல்துறை அதிகாரி மேஜர் சுந்தர்ராஜன் அனைவரிடமும் விசாரிப்பார்.
இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்த தனது அண்ணன் இறந்துவிட்டதை அறிந்த காஞ்சனா அந்த வீட்டுக்கு வருகிறார். அவரையும் கொலை செய்ய முயற்சி நடக்கும். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்துவிடுவார். இந்த தொடர் கொலைகள் செய்தது யார்? கொலை ஏன் நடக்கிறது என்பதை எவராலும் அனுமானிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை செல்லும்.
இந்த நிலையில் தற்செயலாக நாயகன் ரவிச்சந்திரனை காஞ்சனா பார்ப்பார். அவர் தன்னுடைய வீட்டில் நடக்கும் தொடர் கொலைகளை பற்றி கூறும் போது தன்னுடைய காதலியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த வீட்டிற்குள் வருவார். அவர் ஒவ்வொருவராக சந்தேகப்படுவார். அசோகன் தான் கொலையாளியா? எஸ்வி ராமதாஸ் தான் கொலையாளியா? அல்லது டாக்டர் பாலாஜி கொலையாளியா? என்று துப்பறிவார்.
1948-லயே பாலிவுட் சினிமாவை கலக்கிய தமிழர் எடுத்தப் படம்… எஸ்.எஸ்.வாசன் தான் அவர்..!
ஒரு கட்டத்தில் அவர் கொலையாளியை பிடித்து தப்பவிட்டு விடுவார் . ஆனால் கொலையாளி முகமூடியை அணிந்து இருப்பான் என்பதால் அவரால் அந்த கொலையாளியின் முகத்தை பார்க்க முடியாது. ஆனால் அந்த கண்களை மட்டும் அவர் பார்த்து விடுவார். அந்த கண்களை உடையவர் யார்? அதே கண்களை உடைய கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்து எல்லோரிடமும் கூறும் போது அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் இன்றி பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியாக இருக்கும். இவர்தான் கொலையாளி என்பதை ரவிச்சந்திரன் கூறுவதற்கு முந்தைய காட்சி வரை யாராலும் யூகிக்க முடியாத அளவுக்கு இந்த படத்தின் திரைக்கதை இருக்கும்.
இந்த படத்திற்கு வேதா இசையமைத்திருந்தார். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வித்தியாசமான டியூன்களில் இருக்கும். குறிப்பாக பூம்பூம் மாட்டுக்காரன் என்ற பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
ரவிச்சந்திரனின் துப்பறியும் காட்சிகள், காஞ்சனாவின் பயம் கலந்த அழகு மற்றும் எஸ்வி ராமதாஸ் , அசோகன் நடிப்பு மற்றும் கொலைகாரன் கேரக்டரில் நடித்த வசந்தகுமார் என அனைவரும் இந்த படத்தில் சிறப்பாக நடித்து இருப்பார்கள். ஒரு பக்கம் நாகேஷ் காமெடி தனி டிராக்கில் செல்லும்.
இந்த படத்தில் கொலைகாரனாக நடித்த வசந்தகுமார் இந்த படத்திற்கு முன்போ பின்போ நடித்ததாக தெரியவில்லை. ஆனால் இந்த ஒரே படத்தில் அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார்.
ஹேமாமாலினி நடிக்க வேண்டிய படம்.. அவருக்கு பதில் அறிமுகமான ஜெயலலிதா.. வெண்ணிற ஆடை செய்த சாதனை..!
மொத்தத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பே சஸ்பென்ஸை யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை அமைத்த ஏசி திரிலோகசந்தரின் அதே கண்கள் படம் இன்று பார்த்தாலும் திரில்லிங்காக இருக்கும்.