எமோஷனல் கலந்த த்ரில்லர் ஜானரில் உருவான படம் இறைவன். வரும் செப்.28ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்தப் படத்தைக் குறித்து இயக்குனர் அகமதுவும், நடிகர் ஜெயம் ரவியும் இணைந்து பேட்டி கொடுத்துள்ளனர். என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாமா…
முதலில் படத்தின் இயக்குனர் அகமது சொல்வதைப் பார்ப்போம்.
இந்தப் படத்தை ஜெயம் ரவியை மனசில வச்சித் தான் எழுதுனேன் என்கிறார் படத்தின் டைரக்டர் அகமது. இந்தப் படத்தில் ராகுல் போஸ் மட்டும் அல்ல. பர்பார்மன்ஸ் ஓரியண்டடு படம். எல்லாருமே பயங்கரமா பர்பார்மன்ஸக் காட்டிருக்காங்க. இந்தப் படத்துல நிஜமாகவே ராகுல் போஸ் மென்டல் ஆஸ்பிட்டல்ல இருந்து தப்பிச்ச மாதிரியே இருப்பாரு. அவர் தான் ஒரு சைக்கோ கில்லர்.
இந்தப் படத்துலயும் டிரைலரப் பார்க்கும்போது சீனியர் கேரக்டர் சார்லி சார் வர்றாரு. அவருக்கும் முக்கியமான கேரக்டர் தான். ஹீரோவோட வாழ்க்கைல ஏதோ ஒரு கட்டத்துல கிராஸ் பண்றாரு. சும்மாவே எனக்குக் கதை சொல்ல வராது. அதையும் மீறி நிறைய சொல்லணும்னு நினைச்சாலும் என்னால முடியாது.
ஏன்னா நிறைய விஷ_வல்ஸ் தான். என் மேல ஜெயம் ரவி வச்சிருக்குற நம்பிக்கை தான் என்னால இந்தப் படத்தை எடுக்க முடிஞ்சது. இந்தப் படத்துக்காக இவரு பார்த்து ரெண்டு விஷயங்கள் சொன்னாலும் அது வேலியுடாவும், நியாயமாகவும் இருக்கும். ஏன்னா அவரும் ஒரு டைரக்டர் தான்.
இந்தப் படத்தைப் பற்றி ஜெயம் ரவி என்ன சொல்கிறார்னு பார்ப்போம்.
இந்தப் படத்துலயும் போலீஸ் தான். ஆனா போகன், தனி ஒருவன், மிருகன், அடங்க மறு படங்களில் எல்லாம் வேறு வேறு களம். அதனால் பிளே பண்றதுக்கு ஈசியா இருந்தது கேரக்டர். இந்தப் படத்துலயும் ட்ரைலர் பார்த்தவரைக்கும் கொஞ்சம் சைக்கோ தான்.
ஆனா வேற ஒரு மைன்ட் செட்ல இருக்கக்கூடிய கார்ப். சோ எனக்கு அதை பிளே பண்ணும்போது புதுசா தான் இருந்தது. எந்தப் படத்துலயும் பண்ணாத மாதிரி தான் இருந்தது அது தான் ஆடியன்சுக்கும் இருக்கும்னு நம்புறேன்.
எல்லோரும் படம் பார்க்க வரணும்கறது தான் எங்களோட விருப்பம். ஆனா இந்தப் படத்தைப் பொருத்த வரை குழந்தைங்களை வீட்ல விட்டுட்டுத் தான் வருவாங்க. இந்தப் படம் இந்த ஜானர் பிடிச்சவங்களுக்காகத் தான் எடுக்கப் போறோம். அதனால த்ரில்லர் படத்துல அது இல்லன்னா ரசிகர்கள் ஏமாற்றம் அடைஞ்சிருவாங்க.
பேமிலி ஆடியன்ஸ மைண்ட்ல வச்சித் தான் ரொமான்ஸ், சாங்ஸ் இருக்குது. சார்லி சாருக்கு டாப் ஆங்கிள்ல ஒரு ஷாட் வச்சிருக்காரு. அதைப் பார்த்த உடனே கிளாப் பண்ணிட்டேன். ஹிஸ்டரியிலேயே இப்படி ஒரு ஷாட்டப் பார்த்ததில்லை.
எங்க அண்ணன் வேற ஒரு ஹீரோவை வச்சிப் பண்ணினார்னா அவரு அதைப் பண்றதுக்கு கஷ்டப்படுவாரு. என்னை வச்சிப் பண்றாருன்னா அவருக்குக் கொஞ்சம் ஈசியா இருக்கும்.