அமைதியான ஆர்ப்பாட்டமில்லாமல் அதே நேரம் சூப்பராக நடித்த நடிகைகள் வெகுசிலரே உண்டு. அவர்களில் ஒருவர் தான் மோனல். அவர் நடிப்பில் வெளியான அனைத்துப் படங்களுமே சூப்பர் ஹிட். அவரது சோகமான முடிவு யாரும் எதிர்பாராதது. சிம்ரனோட தங்கை என்பது நமக்கு தெரிந்த விஷயமே. அவர் என்ன சொல்கிறார் மோனலைப் பற்றி எனறு பார்ப்போமா…
காலேஜ் படிச்சு முடிந்ததும் மாடலிங்கில் இருந்தார் மோனல். அவர் சினிமா வாய்ப்பு தேடி அலைந்தார். 90, 2000களில் கொடி கட்டிப் பறந்த சிம்ரனோட தங்கச்சி தான். இவருக்கு சினிமா வாய்ப்பு தேடிக் கொடுத்தது அக்கா சிம்ரன்.
விஜயோட பத்ரி படத்தில் தான் மோனல் அறிமுகம். ஆனால் அதற்கு முன்பே வந்த படம் பார்வை ஒன்றே போதுமே. இந்தப் படத்தில் குணாலுடன் ஜோடி சேர்ந்தார் மோனல். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இந்தப் படத்தின் பாடல்கள் அப்போதைய இளசுகளின் தேசிய கீதமாக இருந்தது. திருடிய இதயத்தைத் திருப்பிக் கொடுத்து விடு பாடல் இப்போது கேட்டாலும் நம்மை மெய்மறக்கச் செய்யும். அந்த வகையில் முதல் படமே இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தது. அடுத்து வந்த பத்ரியும் சூப்பர்ஹிட். லவ்லி, சமுத்திரம், சார்லி சாப்ளின் என வரிசையாக இவர் நடித்த படங்கள் ஹிட் அடித்தன.
இந்தில மா துஜே சலாம் என்ற படத்தில் நடித்து அசத்தினார். திடீர்னு யாருமே எதிர்பார்க்காத நிலையில் 2002ல் அவரது வீட்டிலேயே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அதுமட்டுமல்லாமல் அவர் சாகும்போது என்னுடைய வாழ்க்கையில் உண்மையான ஆம்பளையை நான் சந்திக்கவே இல்லைன்னு கடிதம் எழுதி வச்சிட்டுத் தான் இறந்தாங்க. அந்த சமயத்துல அவர் இறந்ததுக்கு அப்புறமா பல விஷயங்கள் சொல்லப்பட்டது. பார்வை ஒன்றே போதுமே படத்தில் நடிச்ச குணாலுடன் காதல் என்றும் அதை அவர் ஏற்கவில்லை என்றும் சொல்லப்பட்டது. அந்த சோகத்தில் தான் மோனல் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவரது அக்கா சிம்ரன் சொன்னது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மோனல் காதலித்தது உண்மைதான். ஆனால் அவர் குணால் அல்ல. பிரபல டான்ஸ் மாஸ்டரோட தம்பின்னு சொன்னாங்க. மோனல் இறந்து போறதுக்குக் கொஞ்ச நாள்கள் முன்னாடி அவரோட லவ் பிரேக் அப் ஆயிருக்கு. அதைத் தாங்க முடியாம மும்பையில இருக்குற அவரோட வீட்டுக்குப் போயி ரொம்ப அழுதுருக்காங்க. அதுக்கு அப்புறமா சினிமாவுல கவனம் செலுத்தி தன்னோட கேரியரை டெவலப் பண்ண சென்னை வந்தாங்க. அப்ப தான் என்னோட தங்கச்சி இறந்து போனாங்கன்னு சிம்ரன் சொன்னார். அதுமட்டுமல்லாமல் அவர் பிரபல டான்ஸ் மாஸ்டர் மற்றும் அவருடன் இருந்த சிலர் மீதும் போலீஸ் ஸ்டேஷனில் கம்ளைண்ட்டும் கொடுத்தார்.
ஆனா இந்த வழக்குல எந்த ஆதாரமும் இல்;லாததால் அது கேன்சல் ஆச்சு. அந்த நேரத்தில் சிம்ரன் கனடால பஞ்ச தந்திரம் சூட்டிங்ல இருந்தாங்க. இப்போ மோனல் இறந்து 21 வருடங்கள் ஆன பின்பும் தனது தங்கையின் இழப்பில் இருந்து சிம்ரனால மீளமுடியல. நீ இப்ப இங்க இல்லாம இருக்கலாம். ஆனா எனக்குள்ள நீ வாழ்ந்துகிட்டு தான் இருக்க. நான் உன்னை ரொம்பவே மிஸ் பண்றேன்… மோனோன்னு இன்ஸ்டாவில பதிவு பண்ணிருக்காங்க.
இதுபற்றி நெட்டிசன்ஸ் ஒருவர் இப்படி சொல்கிறார். மோனல் நல்ல டைப். இந்த பொண்ணுக்கு நார்த் சைடுல யாரையாவது லவ் பண்ணிருக்கலாம். இங்க உள்ளவங்களுக்கு முதுகெலும்பு கிடையாது. இன்னொருவர் சொல்கையில் மோனல் நல்ல அழகு. தொலைவில் இருந்து பார்க்கும் போது சிம்ரன் மாதிரி இருப்பாங்க.