விநாயகர் சதுர்த்தியை எளிமையாகக் கொண்டாடுவது எப்படி? வழிபடும் நேரம், முறை என்னன்னு பார்க்கலாமா…

By Sankar Velu

Published:

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கொண்டாடப்படும் விழா விநாயகர் சதுர்த்தி. மும்பையில் பிரசித்தி வாய்ந்தது. பெரிய பெரிய விநாயகர் சிலையை ஊர்வலமாக நகர் முழுவதும் எடுத்துச் சென்று ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் கடலில் சென்று கரைக்கச் செல்லும் போது காண்பது கண்கொள்ளாக்காட்சி. விநாயகர் சதுர்த்தி அன்று அனைத்துத் தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் சேர்ந்து விநாயகரை வழிபட்டுக்கொண்டாடி மகிழ்வர்.

Pillaiyar 1
Pillaiyar2

வினைகள் தீர்க்கும் விநாயகருக்கு ஆனைமுகத்தான், பிள்ளையார் என காரணப்பெயர்களும் உண்டு. சரி. விநாயகர் சதுர்த்தி இன்றா, நாளையா என சந்தேகம் வரலாம். அதுபற்றியும் கொண்டாடும் முறை பற்றியும் பார்க்கலாம்.

தெய்வங்களில் எல்லாம் எளிமையான தெய்வம் விநாயகர். பாரம்பரியமான ஒரு திருவிழா. ஆவணி மாதத்தில் வரக்கூடிய சதுர்;த்தி தான் விநாயகர் சதுர்த்தி.

இந்த ஆண்டு அது புரட்டாசி மாதத்தில் வருகிறது. செப்.18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் விநாயகர் சதுர்த்தி வருகிறது. பிள்ளையார்பட்டியில் 19ம் தேதி தான் கொண்டாடப்படுகிறது. சூரியன் உதயமாகிற நாளில் சதுர்த்தி அன்று தான் வருகிறது. அதே போல மதுரை, திருச்சியில் 18ம் தேதியே கொண்டாடப்படுகிறது.

18ம் தேதி மாலை முதலே கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கி விடுகிறது.18ம் தேதி காலை 11.39 மணிக்கு சதுர்த்தி தொடங்கி மறுநாள் 19ம் தேதி காலை 11.50மணி வரை உள்ளது.

18ம் தேதி காலை 9மணிக்கு மேல் 10.20க்குள் கடையில் போய் பிள்ளையார் சிலையை வாங்கிக் கொண்டு வீட்டில் வைக்கலாம். மதியம்12 மணிமுதல் 1.30 மணி வரையும், மாலை 6 மணிக்கு மேல் பூஜைகளை செய்யலாம். 19ம் தேதி காலை 7 மணி முதல் 8.45மணிக்குள் பிள்ளையாரை வாங்கிக் கொள்ளலாம்.

அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு மேல் மதியம் 12 மணி வரையும் மாலை 6 மணிக்கு மேல் வழிபாட்டை வைத்துக் கொள்ளலாம்.

வருடந்தோறும் சிலை வாங்கி அதைக் கரைக்க வேண்டுமா என்று ஒரு கேள்வி எழலாம்.இதில் தவறு ஏதும் இல்லை. இவ்வாறு கடையில் வாங்கி வந்தும் செய்யலாம். நாமே களிமண்ணாலும் அழகாக செய்து கொள்ளலாம். இது உற்சாகமாக இருக்கும். வாய்ப்பு இருப்பவர்கள் வாங்குங்க.

Pillaiyar
Pillaiyar

வாங்க முடியாதவர்கள் வீட்டில் உள்ள விநாயகர் படத்தை வைத்து வழிபடலாம். எருக்கம்பூ மாலை, அருகம்புல், மாவிலை, தோரணம் வாங்கிக் கொள்ளுங்கள். இரண்டு வாழைப்பழம், வெத்தலைப்பாக்கு போதும். கொழுக்கட்டைதான் விநாயகர் சதுர்த்திக்கு ஸ்பெஷல்.பிடி கொழுக்கட்டை, மோதகம் செய்வது சிறப்பு. பால், தேன், சர்க்கரைப்பாகு பதார்த்தங்கள், சுண்டல் என ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக செய்து கொள்ளலாம். வாழை இலை போட்டு அதில் நைவேத்தியம் வைத்து விநாயகர் பாராயணம் செய்து பூஜை செய்து கொள்ளலாம்.

விநாயகரைக் கரைக்க முடியும் என்றால் மட்டும் கடையில் வாங்குங்கள். கடல், ஏரி,குளம் சென்று கரைக்க முடியாதவர்கள் வீட்டிலேயே கரைத்துக் கொள்ளலாம். கரைக்க முடியாமல் எங்காவது கொண்டு போய் வைத்து விடாதீர்கள். 3 நாள் அல்லது 5 நாள் கழித்து கரைத்துக் கொள்ளலாம். அன்றாடம் அவல். பொரி, கடலை வைத்துக் கொள்ளலாம்.திங்கள் அல்லது வியாழக்கிழமை அன்று விஜர்சனம் செய்து கொள்ளலாம்.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்