கடந்த 1956 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மர்மவீரன். இந்த படத்தில் தமிழின் முன்னணி நாயகனான சிவாஜி கணேசன், தெலுங்கு முன்னணி நாயகனான என்டி ராமராவ் மற்றும் ஜெமினி கணேசன், வி கே ராமசாமி உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்தனர். இந்த படத்தின் கதாநாயகன் ஸ்ரீராம் தங்களது நண்பர்கள் என்பதால் அவர்கள் பணமே வாங்காமல் சிறப்பு தோற்றத்தில் நடித்துக் கொடுத்த போதிலும் இந்த படம் படுதோல்வி அடைந்தது.
இந்த படத்தின் கதாநாயகி வைஜெயந்திமாலா. இந்த படத்தை ஸ்ரீராம் தயாரித்து நடித்து இருந்தார். இந்த படத்திற்காக அவர் தனது வாழ்நாளில் சம்பாதித்த அத்தனை பணத்தையும் செலவழித்தார். அமெரிக்க எழுத்தாளர் ஜான்ஸ்டன் மெக்கல்லியின் புகழ்பெற்ற ஸோரோ வரிசை நாவல்களின் சாகசக் கதாபாத்திரமான டான் டியாகோவை நினைவூட்டும் வேடத்தில் ஸ்ரீராம் இந்த படத்தில் நடித்திருந்தார்.
மகேந்திரவர்மன் மற்றும் பரம்பீர் என இரண்டு தோற்றங்களில் ஒருவர் மன்னனாகவும், இன்னொருவர் பைத்தியக்காரனாகவும் இரண்டு பரிணாமங்களில் ஸ்ரீராமின் நடிப்பும் அருமையாக இருந்தது. சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி ராமராவ், வி.கே ராமசாமி, நாகேஸ்வரராவ் உள்ளிட்டோர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். அவர்களது காட்சிகளும் அருமையாக இருந்தது. இந்த படத்தின் நாயகியான வைஜயந்திமாலா அதுவரை பாலிியுட்டில் பிஸியாக இருந்த நிலையிலும் தனது நண்பர் என்பதால் ஸ்ரீராம் அவர்களுக்காக இந்த படத்தில் நடித்து கொடுத்தார்.
பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..
இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எலக்ட்ரிக் வாள் சண்டை படமாக்கப்பட்டது. கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன்பே எலக்ட்ரிக் வாள் சண்டை என்ற புதுமையை புகுத்தி இருந்தார்கள். இந்த காட்சி ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. பெரும் பொருட்செலவில் உருவான இந்த படம் வெளியாகி தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது. ஆனால் இரண்டு மொழிகளிலும் இந்த படம் படுதோல்வி அடைந்தது.
இந்த படம் வெறும் நான்கு வாரங்கள் மட்டுமே ஓடியதால் இந்த படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான ஸ்ரீராமுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. அதன்பின்னர் அவர் சினிமா உலகை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் கூறப்பட்டது. இந்த படத்தின் கதை என்னவெனில் மன்னன் நாகையாவின் மகள் வைஜெயந்திமாலா. அவரது முறை மாப்பிள்ளை ஸ்ரீராம். ஆனால் வைஜெயந்தியமாலாவை அடைய வேண்டும் என்று அந்நாட்டின் தளபதி முயற்சிப்பார். இதனால் மன்னனை சிறையில் அடைத்து, வைஜெயந்திமாலாவை திருமணம் செய்ய முயற்சிப்பார்.
தேச பற்றா……? கதாபாத்திரமா…..? தியாகம் செய்த சிவாஜி….. எதற்காக தெரியுமா…..!!
இந்த நிலையில் வைஜெயந்திமாலாவின் அத்தை மகனும் பவள நாட்டு மன்னனுமான ஸ்ரீராம், தளபதியின் சதியை முறியடிக்க பைத்தியக்காரன் வேஷத்தில் நாட்டிற்குள் நுழைவார். மன்னன் சிறையில் இருக்க வைஜெயந்திமாலா இக்கட்டான நிலையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு பைத்தியக்காரன் வேடத்தில் இருந்து தனது நண்பர் தங்கவேலுடன் இணைந்து அந்த நாட்டில் உள்ள பாதுகாப்பு மற்றும் ரகசியங்களை கண்டுபிடித்து மன்னனை சிறையில் இருந்து மீட்டு வைஜெயந்திமாலாவை கடைசியில் கைப்பிடிப்பது தான் இந்த படத்தின் கதை
சாவித்திரிக்கு – சரோஜாதேவிக்கும் இடையே இப்படி ஒரு போட்டியா… என்ன நடந்தது தெரியுமா?
இந்த படத்தில் பிஎஸ் வீரப்பா வில்லனாக அபாரமாக நடித்திருப்பார். எம்என் ராஜம், நாகையா உள்ளிட்டவர்களின் நடிப்பு அருமையாக இருந்தும் டிஆர் ரகுநாத் இயக்கிய இந்த படம் ஏன் வெற்றி பெறவில்லை என்பது படத்தின் டைட்டில் போலவே மர்மமாக இருந்தது.