80களில் வெளியான படங்களில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். கதை படத்தைப் பார்க்கப் பார்க்க சுவாரசியத்தைக் கூட்டும். அடுத்து என்ன என்பதற்கு டுவிஸ்ட் வைக்கும் விதமாகவே ஒவ்வொரு காட்சியும் இருக்கும். அதுதான் படத்தின் வெற்றிக்கு வழிவகுக்கும்.
அந்த வகையில் திரைக்கதையில் தொய்வு ஏற்படும் நேரம் காமெடியோ, பாடல்களோ இடம்பெறும். அதே போல் ஒரு மசாலா படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நல்ல உதாரணமாக அன்றைய சினிமாக்கள் இருந்தன. சரியான விகிதத்தில் கதை, திரைக்கதை, காமெடி, வில்லன், சென்டிமென்ட், பாட்டு, பைட்டு என இருந்தன. அந்த வகையில் ரஜினியும், ஸ்ரீபிரியாவும் இணைந்து நடித்த பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.
சூப்பர்ஸ்டார் ரஜினியும், நடிகை ஸ்ரீபிரியாவும் ஸ்ரீதேவிக்கு அடுத்தபடியாக அதிக படங்களில் இணைந்து நடித்துள்ளார். இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் 11. அவற்றில் முக்கியமான சில படங்கள் பற்றி பார்ப்போம்.
அவள் அப்படித்தான்
1978ல் ருத்ரைய்யா இயக்கிய படம். கமல், ரஜினி, ஸ்ரீபிரியா, சிவச்சந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் மஞ்சுவாக வரும் ஸ்ரீபிரியாவின் நடிப்பு அருமையாகவும், யதார்த்தமாகவும் நடித்துள்ளார். உறவுகள் தொடர்கதை, பன்னீர் புஷ்பங்களே, வாழ்க்கை ஓடம் ஆகிய பாடல்கள் மாஸ் ரகங்கள்.
ஆடு புலி ஆட்டம்
கமல், ரஜினி, ஸ்ரீபிரியா உள்பட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் மகேந்திரன் கதை எழுதஎஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில், விஜய பாஸ்கர் இசையில் உருவான வெற்றிப்படம். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பெயர் கிடைத்தது.
பொல்லாதவன்
1980ல் வெளியான படம். முக்தா சீனிவாசன் இயக்கியுள்ளார். ரஜினி, லட்சுமி, ஸ்ரீபிரியா உள்பட பலர் நடித்துள்ளனர். நா பொல்லாதவன் என்ற பாடல் செம மாஸ்.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் தான் அதோ வாரான்டி வாரான்டி என்ற இனிய காதல் பாடல் வருகிறது.
என் கேள்விக்கு என்ன பதில்
பி.மாதவன் இயக்கத்தில் 1978ல் வெளியான படம். ரஜினி, விஜயகுமார், ஸ்ரீபிரியா உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.
பில்லா
1980ல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளியான படம். ரஜினி, ஸ்ரீபிரியா, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். வெத்தலய போட்டேன்டி, மை நேம் இஸ் பில்லா ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாதவை.