சிவாஜி கணேசன் மற்றும் அவருடைய மனைவியாக நடித்த பிரமிளா ஆகிய இருவரும் டூயட் பாடல் ஒன்றில் நடிக்க வேண்டி இருந்த நிலையில் பிரமிளாவுக்கு திடீரென முக்கிய பணி இருந்ததால் அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் சிவாஜி மனைவி கேரக்டரில் நடித்த பிரமிளாவுக்கு பதிலாக டூப் நடிக்க வைத்து கிட்டத்தட்ட பாதி பாடல் படமாக்கப்பட்டது. அப்படி படமாக்கியவர் தான் இயக்குனர் எஸ்பி முத்துராமன்.
சிவாஜி கணேசன், பிரமிளா, ஸ்ரீதேவி, விஜயகுமார், மேஜர் சுந்தரராஜன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உண்டான திரைப்படம் தான் கவரிமான். எஸ்பி முத்துராமன் இயக்கத்தில், பஞ்சு அருணாச்சலம் திரைக்கதையில் உருவான இந்த படம் கடந்த 1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி வெளியானது.
சிவாஜி கணேசன் மற்றும் பிரமிளா ஆகிய இருவருக்கும் ஒரு மகள் உண்டு. இந்த நிலையில் சிவாஜிகணேசன் வெளியூர் செல்வதாக கிளம்புவார். அப்போது அவர் செல்ல வேண்டிய விமானம் ரத்தானதால் மீண்டும் அவர் வீட்டிற்கு திரும்ப வருவார்.
அப்போது படுக்கை அறையில் தனது மனைவி வேறொருவரிடம் உல்லாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைவார். உடனே அவர் ஆத்திரத்தில் பிரமிளாவை அடித்த நிலையில் அவர் இறந்து விடுவார். அதை மகள் பார்த்து தனது அம்மாவை அப்பா கொலை செய்துவிட்டார் என்ற எண்ணம் அவருக்கு சிறுவயதில் இருந்தே இருக்கும்.
சிவாஜியை அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் திட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அவரது அப்பா மட்டும் சிவாஜியின் செயலில் கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும் என்று அந்த காரணம் அனேகமாக இதுவாகத்தான் இருக்கும் என்று டைரியில் எழுதி வைத்திருப்பார். இந்த நிலையில் சிறையில் இருந்து திரும்பி வந்த பிறகு சிவாஜியை யாரும் மதிக்க மாட்டார்கள். மகள் ஸ்ரீதேவி கூட சிவாஜி உடன் பேச மாட்டார்.
இந்த நிலையில் தான் ஸ்ரீதேவியை வில்லன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்யும்போது அவனை எதிர்பாராமல் ஸ்ரீதேவி கொலை செய்வார். ஆனால் ஸ்ரீதேவி செய்த கொலைப்பழியை சிவாஜி ஏற்றுக்கொண்டு சிறைக்கு செல்வார். அப்போதுதான் ஸ்ரீதேவி தனது அப்பா எவ்வளவு நல்லவர் என்பதை புரிந்து கொள்வார்.
சிவாஜி சிறைக்கு செல்லும்போது அவரது அப்பா நீ திரும்பி வரும்போது நான் இருக்கின்றேனா இல்லையா என்று எனக்கு தெரியாது, ஆனால் என்னுடைய டைரி இருக்கும் என்று கூறுவார்.
இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்கள் பெரிய அளவில் ரசிக்கவில்லை. எதிர்பார்த்த அளவு இந்த திரைப்படம் வசூல் செய்யாமல் ஏமாற்றத்தை தந்தது. இருப்பினும் சிவாஜி தனது நடிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்திய படங்களில் ஒன்றாக இந்த படம் அமைந்தது.
இந்த நிலையில் சிவாஜி மற்றும் பிரமிளா டூயட் பாடல் ஒன்று படமாக்க திடமிடப்பட்டிருந்தது. பெங்களூரில் படப்பிடிப்பு நடத்த இருந்த நிலையில் தன்னால் பெங்களூருக்கு வர முடியாத சூழ்நிலையை பிரமிளா கூறினார். இதை அடுத்து இயக்குனர் எஸ்பி முத்துராமன், பிரமிளாவுக்கு பதிலாக டூப் நடிகை ஒருவரை பயன்படுத்தி பெங்களூரில் கிட்டத்தட்ட பாதி பாடலை படமாக்கினார். டூப் நடிகையை வைத்து எடுத்தது எல்லாம் லாங் ஷாட் ஆக இருக்கும். அதன்பின் சென்னையில் பிரமிளாவை வைத்து சில க்ளோசப் ஷாட் எடுத்து இரண்டையும் மிக்ஸ் செய்திருப்பார்கள்.
அதன் பிறகு சென்னை வந்ததும் மீண்டும் சிவாஜியையும் பிரமிளாவின் குழந்தையும் வைத்து மீதி படத்தை உருவாக்கினார். இந்த பாடலை முழுதாக போட்டு காட்டிய போது சிவாஜி உள்பட படக்குழுவினர் அனைவரும் அசந்து விட்டனர். டூப் நடிகை என்று சொல்ல முடியாத அளவுக்கு தத்ரூபமாக எடிட்டிங்கில் மாயாஜாலம் காட்டி இருந்தார் எடிட்டர் பாபு. அந்த பாடல் தான் பூப்போலே உன் புன்னகையில் என்ற பாடல். இதை படித்தபின் யூடியூபில் இந்த பாடலை பாருங்கள், எவ்வளவு சாமர்த்தியமாக இந்த பாடல் படமாக்கப்பட்டிருக்கும் என்பது தெரிய வரும்.
பாதியில் நின்ற சிவாஜி படம்.. எம்ஜிஆர் படத்தை எடுத்து அதில் கிடைத்த லாபத்தில் மீண்டும் தொடக்கம்..
இந்த படத்தில் சிவாஜியின் மகளாக ஸ்ரீதேவி சிறிது நேரமே வந்தாலும் மிக அருமையாக நடித்திருப்பார். சிவாஜியின் அப்பாவாக கல்கத்தா விசுவநாதன் நடித்திருந்தார். இசைஞானி இளையராஜாவின் இசையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகிய என்பதும் குறிப்பாக பூப்போலே உன் புன்னகையில் என்ற பாடல் இன்று வரை பிரபலமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.