விஸ்வநாதன் – ராமமூர்த்தி…. கிருஷ்ணன் – பஞ்சு….. திரையுலகில் இனைந்து சாதித்த பிரபலங்கள்….!!

தமிழ் சினிமாவில் மிகவும் அபூர்வமாக இருவர் சேர்ந்து பணிபுரிந்த நிகழ்வுகள் நடந்துள்ளன. அந்த வகையில் இனைந்து  பணிபுரிந்த கிருஷ்ணன் – பஞ்சு, ராபர்ட் – ராஜசேகர் ஆகிய இயக்குனர்களும் விஸ்வநாதன் – ராமமூர்த்தி, சங்கர்…

vishwanathan ramamurthi

தமிழ் சினிமாவில் மிகவும் அபூர்வமாக இருவர் சேர்ந்து பணிபுரிந்த நிகழ்வுகள் நடந்துள்ளன. அந்த வகையில் இனைந்து  பணிபுரிந்த கிருஷ்ணன் – பஞ்சு, ராபர்ட் – ராஜசேகர் ஆகிய இயக்குனர்களும் விஸ்வநாதன் – ராமமூர்த்தி, சங்கர் – கணேஷ் ஆகிய இசையமைப்பாளர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

krishnan panju

கிருஷ்ணன் – பஞ்சு

கிருஷ்ணன் – பஞ்சு என்ற இரட்டையர்கள் இருவரும் ஒரே இயக்குனர்களிடம் உதவியாளர்களாக இருந்த நிலையில், பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளனர். 1944ஆம் ஆண்டு பூம்பாவை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர்களாக அறிமுகமாகினர். சிவாஜி கணேசன் அறிமுகமான முதல் படமான பராசக்தி படத்தை இயக்கியவர்களும் கிருஷ்ணன் – பஞ்சு தான்.

எம்ஆர் ராதா நடித்த ரத்தக்கண்ணீர், சிவாஜி கணேசன் நடித்த உயர்ந்த மனிதன், புதையல், இளைய தலைமுறை, தெய்வ பிறவி, ஜெய்சங்கர் நடித்த குழந்தையும் தெய்வமும், உள்ளிட்ட பல ஹிட் படங்களை கிருஷ்ணன் – பஞ்சு இயக்கியுள்ளனர் .

robert rajasekaran

ராபர்ட் – ராஜசேகர்

கிருஷ்ணன் பஞ்சுவை அடுத்து தமிழ் சினிமாவில் இருவராக இனைந்து வெற்றிகரமாக வலம் வந்தவர்கள் ராபர்ட் – ராஜசேகர். ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளர்களாக இருந்த இருவரும் அதன் பின்னர் ஒளிப்பதிவு மற்றும் இயக்குனர் என இரு பணிகளையும் சேர்ந்து செய்தனர். ஒரு தலை ராகம் திரைப்படத்தில் இந்த இருவர் தான் ஒளிப்பதிவு செய்தனர்.

பாலைவன சோலை என்ற திரைப்படத்தை முதன்முதலாக இயக்கிய ராபர்ட் – ராஜசேகர் சுகாசினி நடித்த காலையில் தொடங்கி மாலையில் முடிவடையும் வகையிலான கதையம்சம் கொண்ட கல்யாண காலம் என்ற படத்தையும் சின்ன பூவே மெல்ல பேசு, மனசுக்குள் மத்தாப்பு, பறவைகள் பலவிதம் உள்ளிட்ட படங்களையும் இயக்கி உள்ளனர்.

vishwanathan ramamurthi1

விஸ்வநாதன் – ராமமூர்த்தி

தமிழ் சினிமாவில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இனைந்து  பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். முதன்முதலாக 1952 ஆம் ஆண்டு பணம் என்ற திரைப்படத்தில் தான் விசுவநாதன் – ராமமூர்த்தி இசையமைத்தனர். இந்த படம் சிவாஜி கணேசன் நடித்த இரண்டாவது படம். இதனை அடுத்து தேவதாஸ், சொர்க்கவாசல், வைர மாளிகை, பக்த மார்கண்டேயா, பாதகாணிக்கை, பாசம், ஆனந்த ஜோதி என பல எம்.ஜி.ஆர் சிவாஜி படங்கள் உள்பட ஏராளமான படங்களை இனைந்து இசையமைத்தார்கள்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இனைந்து இசையமைத்த பிறகு எம்எஸ் விஸ்வநாதன் பிரிந்து ஏராளமான படங்களுக்கு இசையமைத்தார். ராமமூர்த்தி ஒரு சில படங்களுக்கு இசையமைத்தார் . பின்னர் 30 ஆண்டுகளுக்கு மீண்டும் ஒரு திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து இசையமைத்தனர். அந்த படம் தான் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் திரைப்படம்.

sankar ganesh

சங்கர் – கணேஷ்

விஸ்வநாதன் ராமமூர்த்தியை அடுத்து இனைந்து இசையமைப்பாளர்களாக பணிபுரிந்த இருவர் தான்  சங்கர் – கணேஷ். இருவருமே எம்எஸ் விஸ்வநாதன் அவர்களிடம் உதவியாளர்களாக இருந்த நிலையில் கடந்த 1967 ஆம் ஆண்டு மகராசி என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகினர். அதன் பிறகு தேன் கிண்ணம், நான் ஏன் பிறந்தேன், இதயவீணை, காசி யாத்திரை, கருணை உள்ளம் உள்ளிட்ட பல படங்களுக்கு இந்த இருவரும் இனைந்து இசையமைத்தனர்.