1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தியை வானொலியில் வாசித்தவர் ஒரு தமிழ் நடிகர் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அப்போது ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பாளராக இருந்த பூரணம் விஸ்வநாதன் தான் அந்த செய்தியை வாசித்து இந்திய மக்களுக்கு அந்த மகிழ்ச்சியான செய்தியை கூறினார்.
நடிகர் பூரணம் விஸ்வநாதன் சென்னை சேர்ந்தவர். சிறுவயதிலேயே அவருக்கு நாடகம் நடிப்பதில் விருப்பம். ஆனால் அவருக்கு ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிக்கும் வேலை கிடைத்ததால் அவர் டெல்லி சென்றார். இந்தியா சுதந்திரம் வாங்கிய செய்தியை வாசித்த பெருமை அவருக்கு உண்டு.
டைட்டிலில் யார் பெயர் முதலில் போடுவது? மூன்று நடிகைகள் இடையே சண்டை.. சமயோசிதமாக யோசித்த ஏவிஎம்..!
இதனை அடுத்து அவர் 1964ஆம் ஆண்டு சென்னைக்கு மாற்றலாகி வந்தார். இங்கு செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து கொண்டே அவர் சில நாடகங்களிலும் நடித்தார். பல பத்திரிகைகளிலும் இவர் பணிபுரிந்தார். இந்த நிலையில் தான் அவருக்கு திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.
கடந்த 1968ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடித்த ‘உயர்ந்த மனிதன்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் ‘விளையாட்டு பிள்ளை’, ‘இதயவீணை’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘கௌரவம்’, ‘தங்கப்பதக்கம்’ உள்ளிட்ட பல எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி படங்களில் மாறி மாறி நடித்தார்.
இவரது திறமையை முழுமையாக கொண்டு வந்தவர் கே.பாலச்சந்தர் தான். ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படத்தில் ரஜினிக்கு சவால்விடும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். அந்த காமெடி காட்சி இன்றும் பேசப்படுகிறது.
இதனையடுத்து ரஜினியுடன் ‘தில்லுமுல்லு’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். கமல்ஹாசன் நடித்த ‘மூன்றாம் பிறை’ ரஜினி நடித்த ‘கர்ஜனை’, ‘புதுக்கவிதை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவரது நடிப்பை முழுமையாக கொண்டு வந்த படம் என்றால் அது ‘விதி’ என்ற படம் தான். நாயகியின் அப்பாவாகவும் நீதிமன்றத்தில் வேலை பார்க்கும் ஒரு ஊழியராகவும் அவர் சிறப்பாக நடித்திருந்தார்.
‘ஆண்பாவம்’ படத்தில் ரேவதிக்கு அப்பா, ‘வருஷம் 16’ படத்தில் கார்த்திக்கின் தாத்தா என பல படங்களில் அவர் குணசேத்திர வேடங்களில் நடித்திருந்தார். ‘வறுமையின் நிறம் சிகப்பு’ திரைப்படத்தில் அவர் கமல்ஹாசனின் அப்பாவாக நடித்து பல புரட்சிகரமான வசனங்களை பேசியிருப்பார். இவருக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே உள்ள உரையாடல் அருமையாக இருக்கும்.
கடந்த 2002ஆம் ஆண்டு விஜய், பிரியங்கா சோப்ரா நடித்த ‘தமிழன்’ என்ற திரைப்படத்தில் தான் இவர் கடைசியாக நடித்தார். இந்த படத்தில் ஒரு பேருந்து பயணியாக வந்திருப்பார். இவருக்காக தான் விஜய் நீதிமன்றத்தில் வாதாடுவார்.
ஒரே டைட்டில், ஒரே கதை.. ஒரே நாளில் தனித்தனியாக விளம்பரம் கொடுத்த எம்ஜிஆர் – சிவாஜி..!
தமிழ் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தியில் நடித்திருக்கிறார். ஹிந்தியில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘ஏக் துஜே கேலியே’ என்ற திரைப்படத்தில் கமல்ஹாசனின் அப்பாவாக நடித்திருப்பார். நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் கடந்த 2008ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். அவர் மறைந்தாலும் அவரது நடிப்பு இன்னும் திரையில் ஜொலித்து கொண்டே இருக்கும்.