ஒரு திரைப்படத்தை எவ்வளவு சிறப்பாக உருவாக்கினாலும் அதைவிட சிறப்பாக விளம்பரம் செய்தால்தான் அந்த படம் மக்களை சென்று அடையும் என்பது ஆதிகாலத்தில் இருந்தே கடைபிடிக்கப்படும் ஒரு முறையாக இருந்து வருகிறது. வித்தியாசமான விளம்பரம் காரணமாகவே சுமாரான படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும்.
நல்ல படத்திற்கு வித்தியாசமான விளம்பரம் அமைந்தால் அந்த படம் மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமாக அமையும். அந்த வகையில்தான் கடந்த 1982ஆம் ஆண்டு வெளியான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என்ற திரைப்படத்திற்கு வித்தியாசமாக விளம்பரம் செய்ததன் காரணமாக சூப்பர் ஹிட் ஆகியது.
ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த மணிவண்ணன் இயக்கிய முதல் திரைப்படம்தான் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’. மோகன், சுகாசினி, ராதா, எஸ்.வி.சேகர், வினுசக்கரவர்த்தி, மனோபாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். ‘என் புருசன் தான் எனக்கு மட்டும்தான்’, ‘பூவாடை காற்று’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின.
இந்த படத்தின் கதையின்படி மோகனின் அப்பாவும் சுகாசினி அப்பாவும் நண்பர்கள் என்பதால் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். படித்து நல்ல வேலையில் நகரத்தில் இருக்கும் மோகன், கிராமத்தில் இருக்கும் அருக்காணி என்ற சுஹாசினியை பார்த்ததும் திருமணம் செய்ய மறுப்பார். ஆனால் அவருடைய அப்பா கட்டாயத்தினால் திருமணம் செய்து கொள்வார்.

இதனையடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வந்த போது அவருடன் வேலை பார்க்கும் சக ஊழியர்கள் மோகனை கிண்டலும் கேலியும் செய்வார்கள். இந்த நிலையில் தான் தற்செயலாக மோகன், ராதாவை சந்திப்பார். அப்போது மெல்ல மெல்ல காதல் பூக்கும். ஏற்கனவே தனக்கு திருமணமான தகவலை சொல்லாமல் அவருடன் குடும்பம் நடத்துவார்.
40 வருடங்களுக்கு முன்பே திகில் படம் எடுத்த மணிவண்ணன்.. 200 நாள் ஓடிய வெற்றிப்படம்..!
இந்த நிலையில்தான் அதே வீட்டில் வேலைக்காரியாக சுஹாசினி வருவார். தன் புருஷன் இன்னொருத்தருடன் வாழ்கிறார் என்று தெரிந்தவுடன் அவர் எடுக்கும் முடிவுதான் வித்தியாசமான கிளைமாக்ஸ்.
இந்த படத்தை கலைமணி தயாரித்து, கதையும் எழுதி இருந்தார். திரைக்கதை, வசனம் எழுதி மணிவண்ணன் இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த 1982ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும்போது வித்தியாசமாக விளம்பரம் செய்யப்பட்டது. மணிவண்ணன் மற்றும் பாக்யராஜ் ஆகிய இருவரும் கத்தி சண்டை போடுவது போல் அந்த விளம்பரம் அமைந்தது.

அந்த விளம்பரத்தில் பாரதிராஜாவின் சீடர்களில் இருவரில் யார் திறமையானவர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இந்த வித்தியாசமான விளம்பரம் தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
ஒரே கதையை இயக்கிய பாரதிராஜா, பாக்யராஜ்… இரண்டும் வெற்றி பெற்ற ஆச்சரியம்..!
மணிவண்ணனின் முதல் படமே சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்த படம் தமிழகத்தின் பல நகரங்களில் 100 நாட்களை தாண்டி வெற்றி காரமாக ஓடியது. சுஹாசினியின் நடிப்பிற்கு பாராட்டுகள் குவிந்தது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
