கமல்ஹாசன் நடித்த ‘அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தில்தான் ரஜினிகாந்த் நடிகராக அறிமுகமானார் என்பதும், அதன்பின் ஒரு சில கமல்ஹாசன் படங்களில் வில்லனாகவும் ரஜினிகாந்த் நடித்தார் என்பதும் பலர் அறிந்ததே. ஒரு கட்டத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்த படங்களும் உண்டு.
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இருவரும் இணைந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்தனர். இருப்பினும் கடந்த 1979ஆம் ஆண்டு கமலஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது என்பது ஆச்சரியத்திற்குரிய ஒரு தகவல் ஆகும்.
எழுத்தாளர் சுஜாதாவின் இத்தனை நாவல்கள் திரைப்படமாகி இருக்கிறதா? ரஜினி, கமல் நடித்த அனுபவங்கள்..!
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ‘நினைத்தாலே இனிக்கும்’ மற்றும் தியாகராஜன் இயக்கத்தில் உருவான ‘தாய் இல்லாமல் நான் இல்லை’ ஆகிய படங்கள் 1979ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியானது.
கே.பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான நினைத்தாலே இனிக்கும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு குறைந்த அளவே கேரக்டர் என்றாலும், அவர் வரும் சில காட்சிகள் ரசிகர்கள் மனதில் இடம்பெறும் வகையில் இருக்கும்.
அதேபோல் தாயில்லாமல் நானில்லை என்ற திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஒரே ஒரு காட்சியில் மட்டும் பிச்சுவா பக்ரி என்ற கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தில் நாகேஷும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார். தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். சங்கர் கணேஷ் இசையில் உருவான இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது.
ரஜினி – கமல் இணைந்து நடித்த கடைசி படம்.. நினைத்தாலே இனிக்கும் ஒரு இசைக்கவிதை!
இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரும் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக இனிமேல் இணைந்து நடிக்க வேண்டாம் என்று பேசி முடிவு செய்ததாக கூறப்பட்டது. அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை.
20 வருடங்களுக்கும் மேல் மோதிய கமல் – ரஜினி படங்கள்.. மாறி மாறி கிடைத்த வெற்றி..!
இருப்பினும் பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘தில்லுமுல்லு’ திரைப்படத்தில் கமல்ஹாசன் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருப்பார். தற்போது இருவரையும் இணைத்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும் என்று ஒரு சிலர் முயற்சித்து வருகின்றனர். அந்த முயற்சி பலிக்குமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.