சிம்மம் ஆவணி மாத ராசி பலன் 2023!

சிம்ம ராசி அன்பர்களே! ஆவணி மாதத்தினைப் பொறுத்தவரை அற்புதங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். சூர்ய பகவான் தன்னுடைய வீடான சிம்ம ராசியில் ஆட்சி பலத்தில் உள்ளார். மேஷராசியில் இருக்கும் குரு பகவான் சூர்ய பகவானைப்…

simmam

சிம்ம ராசி அன்பர்களே! ஆவணி மாதத்தினைப் பொறுத்தவரை அற்புதங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். சூர்ய பகவான் தன்னுடைய வீடான சிம்ம ராசியில் ஆட்சி பலத்தில் உள்ளார்.

மேஷராசியில் இருக்கும் குரு பகவான் சூர்ய பகவானைப் பார்வையிடுகிறார். இதுவரை நீங்கள் சந்தித்த பிரச்சினைகள், பின்னடைவுகளில் இருந்து மீண்டு நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

சமூகத்தில் பெயர், புகழ், அந்தஸ்து உயரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மேலும் பொருளாதாரரீதியாக மன நிறைவுடன் இருப்பீர்கள். குருவின் பார்வையால் புதன் வக்ரநிவர்த்தி அடைகிறார். புதாத்ய யோகத்தால் மாணவர்களைப் பொறுத்தவரை கல்விரீதியாக மிகச் சிறந்து விளங்குவர்.

எண்ணிய கனவுகளை எட்டிப் பிடிப்பார்கள், பெற்றோர்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தால் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பத்தில் அமைதி, நிம்மதி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும்.

ஆவணி மாதம் உங்களுக்குத் தொட்டது துலங்கும் மாதம் என்றே சொல்லலாம், செவ்வாய் பகவான் இரண்டாம் இடத்தில் வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் பேசும்போது எச்சரிக்கை தேவை.

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை எதிர்பார்த்த வேலைவாய்ப்பு நினைத்த சம்பளத்தில் கிடைக்கப் பெறும். அசையாச் சொத்துகள் மூலம் வருமானம் கிடைக்கும். குல தெய்வத்தின் அனுகிரகம் பரிபூரணமாகக் கிடைக்கும் மாதமாக ஆவணி மாதம் இருக்கும்.

வீடு வாங்குதல், வீடு விற்றல் என்பது போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். சனி பகவான் நண்பர்கள் மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவார். மேலும் குடும்ப வாழ்க்கையினைப் பொறுத்தவரை கணவன்- மனைவி இடையேயான உறவில் பிரிவினை ஏற்படும்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

தொழில் செய்யும் இடத்திலும் வேலை செய்யும் இடத்திலும் பிரச்சினை ஏற்படும். வெளிநாடு, வெளியூர் செல்லும் விஷயங்களால் உங்களுக்கு அனுகூலம் ஏற்படும்.