கடகம் ஆவணி மாத ராசி பலன் 2023!

கடக ராசி அன்பர்களே! ஆவணி மாதத்தினைப் பொறுத்தவரை தொட்டது துலங்கும் மாதமாக இருக்கும். சுக்கிர பகவான் ராசியில் அமர்ந்துள்ளார். சனி பகவான் 7 ஆம் இடத்தில் அஷ்டமத்துச் சனியாக வீற்றுள்ளார். குரு பகவான் 10…

kadagam

கடக ராசி அன்பர்களே! ஆவணி மாதத்தினைப் பொறுத்தவரை தொட்டது துலங்கும் மாதமாக இருக்கும். சுக்கிர பகவான் ராசியில் அமர்ந்துள்ளார். சனி பகவான் 7 ஆம் இடத்தில் அஷ்டமத்துச் சனியாக வீற்றுள்ளார். குரு பகவான் 10 ஆம் இடத்தில் உள்ளார்.

செவ்வாய் பகவான் முயற்சி ஸ்தானத்தில் வீற்றுள்ளார். தனரீதியாக என்று எடுத்துக் கொண்டால் பொருளாதாரரீதியாகச் சிறந்து விளங்குவீர்கள். சேமிப்புரீதியாக கவனம் செலுத்துவீர்கள். வருமானம் இரட்டிப்பு ஆகும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

சாமுத்ரிகா லட்சணப்படி மச்ச பலன்கள்!

வேலைவாய்ப்பினைப் பொறுத்தவரை இதுவரை திறமைக்கேற்ற வேலை கிடைக்காத நிலையில் திறமைக்கேற்ற புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்கள் அனுசரணையுடன் நடந்து கொள்வர்.

சூர்யன்- புதன் சேர்க்கையால் குழந்தைகள் கல்விரீதியாக பெரிய அளவில் ஈடுபாட்டுடன் காணப்படுவார்கள். மேலும் குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தொழில்ரீதியாக எடுத்துக் கொண்டால் தொழில் அபிவிருத்தி செய்யும் முயற்சியில் தைரியமாகக் களம் இறங்கலாம். குடும்பத்தின் மீதான உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையேயான அன்பு அதிகரிக்கும்.

தந்தைரீதியான உறவினர்களால் ஆதாயப் பலன்கள் ஏற்படும்.  தாய்- தந்தை வழி சொந்தங்களால் அனுகூலங்கள் ஏற்படும். ஒரு சிலர் வண்டி- வாகனங்களை மாற்றவோ அல்லது பழுது பார்க்கும் விஷயத்தில் கவனம் செலுத்தவோ செய்வீர்கள்.

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் இதோ!

எதிரிகள் உங்களைக் கண்டு ஓடி ஒளிவார்கள், கடன் சுமையானது படிப்படியாகக் குறையும். கோர்ட் சார்ந்த வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பானது கிடைக்கப் பெறும்.