தீபாவளி அன்று பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவதே அரிதாக இருக்கும் நிலையில் ஒரே தீபாவளியில் விஜயகாந்த் நடித்த இரண்டு திரைப்படங்கள் வெளியாகி அந்த இரண்டுமே தோல்வி அடைந்தன என்பது விஜயகாந்த் ரசிகர்களுக்கு சோகமான ஒரு தகவலாகும்.
கடந்த 1988ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி அன்று விஜயகாந்த் நடித்த ‘உழைத்து வாழ வேண்டும்’ மற்றும் ‘தென்பாண்டி சீமையிலே’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டு படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
பல வெற்றி படங்களை தயாரித்த கோவைத்தம்பி தயாரிப்பில் உருவான திரைப்படம்தான் ‘உழைத்து வாழ வேண்டும்’. விஜயகாந்த், ராதிகா, ராதாரவி, டெல்லி கணேஷ், வடிவுக்கரசி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படம் அமீர்ஜான் இயக்கத்தில் தேவேந்திரன் இசையில் உருவானது. இளையராஜாவை விட்டு பிரிந்தபின் கோவைத்தம்பி தயாரிப்பில் உருவான தோல்வி படங்களில் இதுவும் ஒன்று.
இந்த நிலையில்தான் விஜயகாந்த் நடித்த ‘தென்பாண்டி சீமையிலே’ என்ற திரைப்படமும் அதே நாளில் வெளியானது. விஜயகாந்த், ராதிகா, சந்திரசேகர், பாண்டியன், சீதா, எஸ்எஸ் சந்திரன், கோவை சரளா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த படமும் தோல்வி அடைந்தது விஜயகாந்த் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!
மேலும் ‘தென்பாண்டி சீமையிலே’ திரைப்படத்திற்கு பாக்யராஜ் இசையமைத்து இருந்தார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் அவர் டைட்டில் பாடலையும் பாடி இருப்பார் என்பது ஆச்சரியமான தகவலாகும். ஏற்கனவே இந்த படம் வெளியாவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் அதாவது 1988 ஆகஸ்ட் மாதம் பாக்யராஜ் நடிப்பில் வெளியான ‘இது நம் ஆளு’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார். அதனையடுத்து வேறு ஒரு ஹீரோ படத்திற்கு பாக்யராஜ் இசையமைத்தது இதுதான் முதல் முறையாகும்.
மேலும் ‘உழைத்து வாழ வேண்டும்’, ‘தென்பாண்டி சீமையிலே’ ஆகிய இரண்டு படங்களிலும் விஜயகாந்த் ஜோடியாக ராதிகா நடித்திருந்தார். இரண்டு படங்களிலும் காமெடி கேரக்டரில் எஸ்.எஸ்.சந்திரன் நடித்திருந்தார்.
எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு வெற்றி பெற்ற ஒரே நடிகர் விஜயகாந்த்: 100வது பட பரிதாபங்கள்!
1988ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான ‘உழைத்து வாழ வேண்டும்’, ‘தென்பாண்டி சீமையிலே’ ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அதே ஆண்டில் வெளியான ‘பூந்தோட்ட காவல்காரன்’, ‘செந்தூரப்பூவே’, ‘நல்லவன்’ ஆகிய மூன்று படங்கள் சூப்பர் ஹிட்டாகியது. எனவே அந்த ஆண்டு விஜயகாந்திற்கு வெற்றி ஆண்டாகவே இருந்தது.