படப்பிடிப்பில் தளபதி விஜய்யின் தனித்துவம்! உண்மையை உடைத்த பிரபலம்!

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் தற்பொழுது தனது 67வது படமான லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர். மேலும்…

screenshot65433 1673840702

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் தற்பொழுது தனது 67வது படமான லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர். மேலும் படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

அதை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபுவுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். அடுத்ததாக நண்பன் படத்திற்கு பின் மீண்டும் இயக்குனர் ஷங்கருடன் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் விஜய் அவ்வபோது தனது அரசியல் பணியிலும் கலக்கி வருகிறார்.

இந்நிலையில் விஜய்யின் நடிப்பு குறித்து முன்னணி இயக்குனர் சில தகவல்களை கூறியது தற்பொழுது டிரெண்டாகி வருகிறது.

பொதுவாக முன்னணி ஹீரோக்களின் பட பாடலுக்கு நாமும் அப்படியே நடனமாடி, பஞ்ச் டயலாக்குகள் பேசி கொண்டாடுவது போல அழுகை காட்சிகளில் தன்னை மறந்து அழும் ரசிகர்களும் உள்ளனர். அந்த அளவிற்கு ஹீரோக்களின் நடிப்பு தத்துருவமாக அமைந்திருக்கும். இந்த அழுகை காட்சிகள் எல்லாருக்கும் சிறப்பாக அமையாது.

மாமன்னன் பட வில்லனுடன் கைகோர்க்கும் ரஜினி! தலைவரின் அடுத்த படம் குறித்த மாஸ் அப்டேட்!

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை பல நடிகர்கள் கிளிசரின் உதவியுடன் தான் தனது அழுகை காட்சிகளில் நடித்து வருகின்றனர். ஆனால் கிளிசரினை பயன்படுத்தாமல் இயல்பாகவே படத்தில் அழும் நடிகர்களும் உள்ளனர். அப்படி கிளிசரின் உதவி இல்லாமல் படத்தில் தானாகவே அழும் 3 டாப் நடிகர்கள் தான் சிவாஜி, கமல்,விஜய்.

இந்த தகவலை இயக்குனர் அட்லி அவர்கள் ஒரு மேடையில் விஜய் நடித்த மெர்சல், தெறி  போன்ற படங்களில் அழும் காட்சிகளில் விஜய் கிளிசரினை பயன்படுத்தவில்லை என கூறினார். இதனை மீண்டும் தளபதி ரசிகர்கள், சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.